R.M.VEERAPPAN REAL VILLAIN OF CINEMA WORLD
R.M.VEERAPPAN REAL VILLAIN OF CINEMA WORLD ஆர்.எம்.வீ.யின் திருவிளையாடல் எம்,ஜி.ஆர் நாடக மன்றம்” தொடங்கிய காலத்திலிருந்து எம்.ஜி.ஆருக்கு மிக மிக நெருக்கமாக இருந்தவர்கள் இரண்டு பேர்கள். ஒருவர் ரவீந்தர். மற்றொருவர் ஆர்.எம்.வீரப்பன். ரவீந்தர் கடந்து வந்து சினிமா பாதையை எழுதும்போது ஆர்.எம்.வீரப்பனைப் பற்றி எழுதாமல் தவிர்க்க முடியாது. அப்படி எழுதாமல் விட்டால் அது முழுமை பெறாது. ஆர்.எம்.வீ. அவர்கள் சினிமாத்துறையில் கோலோச்சிவிட்டு, அரசியலில் உச்சாணிக் கொம்பைத் தொட்டவர். அவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. அவரைப்பற்றி நான் கண்டதும், கேட்டதும்,எம்.ஜி.ஆர். பிக்சர்ஸில் மற்றும் சினிமாத்துறையில் அவரோடு இணைந்து பணியாற்றியவர்கள் பகிர்ந்த கருத்துக்களின் அடிப்படையிலும், அவரைப் பற்றி சேகரித்த தகவலின் பேரிலும், இக்கட்டுரையை வடித்திருக்கிறேன். “Your freedom ends where my Nose begins” என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். ஒருவரது தனிப்பட்ட குணாதிசயம் எப்பொழுது மற்றவருடைய வாழ்க்கையில் இடையூறாக அமைகிறதோ அப்போது அந்த மனிதனை விமர்சிப்பதில் தவறேதும் இல்லை என்பது எ...