CHRISTOPHER NOLAN , HOLLYWOOD DIRECTOR BORN 1970 JULY 30
CHRISTOPHER NOLAN , HOLLYWOOD DIRECTOR BORN 1970 JULY 30 கிறிஸ்டோபர் நோலன் (பிறப்பு: சூலை 30, 1970) ஓர் ஐக்கிய அமெரிக்க/இராச்சிய திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தன் சகோதரர் ஜோனதன் நோலனுடன் சிறப்பாக திரைப்படங்களின் திரைகதைகளை எழுதுயுள்ளார். சின்காபி திரைப்படங்கள் என்றொரு திரைப்பட நிறுவனத்தினை நிறுவியுள்ளார். அவரது மெமன்டோ திரைப்படம் மிகவும் பாராட்டப்பட்டத் திரைப்படமாகும். அத்திரைப்படம் மிகுந்த பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத்தந்தது. கிறிஸ்டோபர் நோலன் இன்றைய சிறந்த ஆங்கிலத் திரைப்பட இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். நோலன் தனது இளம் பருவத்தினை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் செலவிட்டார். பின்னர் ஆங்கில இலக்கிய பட்டம் ஒன்றை இலண்டனில் உள்ள பல்கழைக்கழக கல்லூரியில் பெற்றார். கல்லூரியில் நிறைய குறுந்திரைப்படங்களை இயக்கினார். கல்லூரியின் திரைப்படச் சங்கத்தில் சந்தித்த நண்பர்களோடு பின்னர் 1998 இல் பால்லோவிங் திரைப்படத்தினை இயக்கினார். ஆரம்பக்கால வாழ்க்கை இலண்டனில் பிறந்தார் நோலன். அவரது பிரித்தானிய தந்தை பிரெண்டன் நோல...