THATHTHAPPAN KULAM,CUMBUM
தாத்தப்பன் குளம்! - ப.லட்சுமி காரணம் இல்லாமல் காரியம் இல்லை' என்பது போல், சாதாரணமானவை என்று நாம் கடந்து செல்லும் சில இடங்கள், கனமான வரலாறுகளை தன்னுள் தக்க வைத்துள்ளதை அறியும்போது, காலத்தின் சக்தியை வியக்காமல் இருக்க முடியவில்லை. என் சித்தி மகன் திருமணத்திற்காக, சொந்த ஊரான கம்பத்திற்கு சென்றிருந்தேன். பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாம் அங்கு தான் என்றாலும், என் அப்பாவின் உடல் நலம் கருதி, கிராமத்திற்கு குடிவந்த பின், கம்பத்திற்கும், எங்களுக்குமான தொடர்பு அறுந்து விட்டது. ஆனாலும், தாயின் தொப்புள் கொடி உறவு போல், ஆடி ஓடி விளையாண்ட வீதிகளும், அதை ஒட்டிய சம்பவங்களும், படித்த பள்ளி, தோழிகள் என, நினைவுகள் நெஞ்சை முட்டி, ஏக்கத்தை ஏற்படுத்தும். எப்போதாவது இதுபோன்ற விசேஷங்களுக்கு போனால், பிறந்த மண்ணை மிதித்த சந்தோஷத்தில் மனம் பரவசமாகிவிடும். திருமணம் முடிந்து, ஆங்காங்கு கிடந்த நாற்காலிகளில் இருவீட்டு உறவினர்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். என் பெரியம்மா மகளிடம், ''வாசுகி... எத்தனை வருஷமாச்சு... கம்பராயர் பெருமாள் கோவிலுக்கு போயி... கோவிலுக்கு போயிட்டு வருவோமா...'' என...