HAMEEDA BANU BEGUM ,MOTHER OF AKBAR DIED 1604 AUGUST 29
HAMEEDA BANU BEGUM ,MOTHER OF AKBAR DIED 1604 AUGUST 29 அமீதா பானு பேகம் (1527-1604) இரண்டாவது முகலாயப் பேரரசர் உமாயூனின் மனைவிகளில் ஒருவரும், பேரரசர் அக்பரின் தாயும் ஆவார். தில்லியில் உள்ள புகழ் பெற்ற உமாயூனின் சமாதி இவரால் கட்டுவிக்கப்பட்டது. 1562 ல் தொடங்கி அடுத்த எட்டு ஆண்டுகள் முயன்று அதனை நிறைவேற்றினார். வரலாறு[மூலத்தைத் தொகு] அமீதா பானு பேகம் 1527 ஆம் ஆண்டு, பாரசீகத்தைச் சேர்ந்த சியா முசுலிமான சேக் அலி அக்பர் ஜாமி என்பவருக்கு மகளாகப் பிறந்தார். அலி அக்பர் ஜாமி, முதலாவது முகலாயப் பேரரசரான பாபரின் கடைசி மகனான மிர்சா இன்டலின் நண்பரும் குருவும் ஆவார். அமீதா பானுவின் தாயார் மா அஃப்ராசு பேகம். இவர் அலி அக்பர் ஜாமியை சிந்தில் உள்ள பாத் என்னும் இடத்தில் மணந்து கொண்டார். உமாயூனின் தந்தையின் இன்னொரு மனைவியான தில்தார் பேகம் அளித்த விருந்தொன்றில், அமீதா பேகம் முதன் முதலாக உமாயூனைச் சந்தித்தார். அப்போது அவருக்கு 13 வயது. சேர் சா சூரியின் படையெடுப்பின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய உமாயூன் நாடுகடந்து வாழ்ந்து வந்தார். தொடக்கத்தில் உமாயூனைச் சந்திக்க அமீதா ப...