TRICHY STREET VENDOR`S CRITICAL LIFE ON CORONO
TRICHY STREET VENDOR`S CRITICAL LIFE ON CORONO .திருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் ! ஊரடங்கு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளின் நிலையை கண்முன் கொண்டுவருகிறது இப்பதிவு. படியுங்கள்... பகிருங்கள்... By புமாஇமு -May 26, 20200 திருச்சியில் சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் அதிகமாக நடக்கும் சின்னக்கடைவீதி, கல்யாணி கவரிங் பஸ் ஸ்டாப் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள கடைகள் கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக திறக்கவில்லை. தற்போது அறிவித்துள்ள தளர்வின் காரணமாக சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்தோம். ராணி (வயது:45) “என் கணவர் இறந்து 20 வருசமாகுது. நான் இளநீர் வியாபாரம் பன்றேன். ரெண்டு மாசமா வியாபாரம் இல்ல. இப்பத்தான் இருவதாயிரத்துக்கு காய் வாங்கி ரெண்டாயிரத்துக்கு வித்தேன். அதயும் காய்க்காரன் வந்து வாங்கிட்டு போயிட்டான். இன்னைக்கு வித்ததே ரெண்டு இளநீதான். பர்சுல நூறூ ரூவாதான் காசு இருக்கு. இன்னும் கொஞ்சம் நேரத்துல போலிசுக்காரன் வந்து எடு எடுனு சொல்லுவான். இந்த நூறு ரூவாய வச்சி வாடக கட்டனும், ...