Posts

Showing posts with the label SINMAYI

JEYALALITHA `S DAUGHTER WHO ? SINMAYI QUESTIONED

Image
JEYALALITHA `S DAUGHTER WHO ? SINMAYI  QUESTIONED ‘ ஜெயலலிதா மகள்’ என வைரல் ஆகும் படத்தில் இருப்பவர் உண்மையில் யார்? சின்மயி விளக்கம் மேலே இருக்கும் படம்தான் கடந்த சில நாட்களாக வாட்ஸப்பில் பல எம்.பிக்களை சென்று ஷேர் ஆகிக்கொண்டிருக்கிறது. இவர்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்ற தகவலுடன் ஒரு மொபைல் விடாமல் சுற்றிக்கொண்டிருக்கிறது இந்தப் புகைப்படம். 'இவரை எனக்கு தெரியும். கேரளாவை சேர்ந்தவர்" என ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார் பாடகி சின்மயி. அவரையே அழைத்து கேட்டோம். "இந்த உலகத்துல ஒரே மாதிரி 7 பேர் இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம் இல்லையா? அப்படித்தான் இவங்களும். இந்தப் படத்துல உள்ளவங்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது. அவங்க தமிழ்நாட்டுலயே இல்லை. பல வருஷங்களா வெளிநாட்டுல வாழற இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவங்க. படத்துல அந்தப் பெண்கூட இருக்கிறவர் அவங்களோட கணவர் ராமநாதன். எங்கம்மா வயித்துல பிறக்காத பிள்ளை மாதிரி. எனக்கு அண்ணா மாதிரி. அதிர்ந்து பேச மாட்டார். பிரபல மிருதங்க வித்வான் திருவனந்தபுரம் பாலாஜி, அவரோட சகோதரர...