Posts

Showing posts with the label 1822

PERCY BYSSHE SHELLEY,POET BORN 1792 AUGUST 4- JULY 8,1822

Image
PERCY BYSSHE SHELLEY,POET  BORN 1792 AUGUST 4- JULY 8,1822 வாழ்க கவிஞர் ஷெல்லி! வளர்க ஷெல்லி வலியுறுத்திய அஹிம்சை !! @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ எந்தப் பல்கலைக்கழகம் ஷெல்லிக்கு கல்வி அளிக்க மறுத்ததோ அதே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஷெல்லியின் கவிதை வரிகளை, பயிலும் மாணவர்களுக்குப் பாடமாகப் பின்பு போதித்தது; இன்றும் போதித்து வருகிறது. Percy Bysshe Shelley @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ ஆங்கில இலக்கிய உலகில் பரந்துபட்டு அறியப்பட்ட, உணரப்பட்ட கவிஞர், பெர்ஸி பைஷி ஷெல்லி (Percy Bysshe Shelley) ஆவார். நாத்திகக் கருத்தினை வலிந்து பேசி, தன் வாழ்நாளில் சமரசம் செய்துகொள்ளாமல் அதற்காகவே சமரம் செய்த கவிஞர் ஷெல்லி. காதல் இலக்கியத்தில் நிலைத்து நிற்கும் பங்களிப்பினை தனது கவிதைப் படைப்புகளால் அலங்கரித்தவர் ஷெல்லி. ஆனால், காதல் கவிஞர் என பலதரப்பினராலும் அறியப்பட்ட ஷெல்லி, ஒரு நாத்திகர் என்பது அவ்வளவாக அறியப்படவில்லை. தன்னளவில் மட்டும் நாத்திகக் கொள்கையைக் கடைப்பிடித்த கவிஞராக அவர் வாழவில்லை. நாத்திகத்தைப் பிரச்சாரம் செய்யும் கொள்கைப்பற்று, நடைமுறை ஆக்கம் கொண்ட கவிஞராக ஷெல்லி திகழ்ந்...