M G R RULE -ONE REVIEW
M G R RULE -ONE REVIEW எம்.ஜி.ஆர்: கவர்ச்சி மோகம் – பொறுக்கி அரசியலில் தமிழகத்தைத் தள்ளிய பாசிசக் கோமாளி! ‘தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும் சதிகாரி’ என்ற தலைப்பில் ஜெயலலிதாவைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரையை சென்ற இதழில் வெளியிட்டிருந்தோம். தமிழ்ச் சமுதாயத்தை சுயமரியாதையற்ற கையேந்திகளாக, அரசியலற்ற மூடர்களாக, சாராய போதையில் மூழ்கிக் கிடக்கும் அடிமைப் பிண்டங்களாக மாற்றி வருகிறார், ஜெயலலிதா என்று அக்கட்டுரையில் குற்றம் சாட்டியிருந்தோம். எம்.ஜி.ஆர் பாசிஸ்ட் கத்தியை கடித்துக் கொண்டு பைத்தியம் போல முழித்துச் சிரிக்கும் எம்.ஜி.ஆரின் படம். இன்று ஜெயலலிதாவை விமரிசிக்கின்ற எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் உட்பட பலரும் எம்.ஜி.ஆரை மாபெரும் ஜனநாயகவாதியாகவும், ஊழலற்ற உத்தமராகவும், மக்களுக்காகப் பாடுபட்டு உயிர்துறந்த மாமனிதராகவும் காட்டுவதுடன், அவர் காட்டிய வழியில் செல்லத் தவறியதுதான் ஜெயலலிதாவின் குற்றம் என்பதாகவும் சித்தரிக்கின்றனர். எம்.ஜி.ஆர். தமிழகத்தைப் பத்தாண்டுகள் ஆண்டார்; அதில் மூன்றாண்டுகள் நடைபிணமாகவே இருந்து ஆண்டார். அவர் 1987-ல் இறந்தபோது “இடி அமீன்: எழுச்சியும் வீழ்ச்ச...