Posts

Showing posts with the label SOLVED

INJUSTICE WAS SOLVED BY INJUSTICE JUDGEMENT 2020 SEPTEMBER 30 -BABUR MASJID CASE

Image
   INJUSTICE WAS SOLVED BY INJUSTICE JUDGEMENT 2020 SEPTEMBER 30 vகடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பதா? . இயற்றப்பட்ட சட்டங்களின் ஆட்சியைவிட, மக்கள் மனதில் விதைக்கப்படும் நம்பிக்கைகளே ஆட்சியாளர்களின் பலமாகவும் பலவீனமாகவும் செயல்படும். பிரீமியம் ஸ்டோரி டெல்லி நகரத்துக்குச் செல்பவர்களெல்லாம் ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். இந்து, இஸ்லாமிய மன்னர்கள், தேச பக்தர்கள், உலக மனித விடுதலைக்குக் குரல் கொடுத்தவர்களின் பெயர்களே பல தெருக்களுக்குச் சூட்டப்பட்டிருக்கும். ஆனால், திடீரென்று `ஔரங்கசீப் மார்க்’ (தெரு) பெயர் மாற்றப்பட்டு, `அப்துல் கலாம் மார்க்’ என்று போடப்பட்டிருக்கிறது. இன்னும் பல முகலாய மன்னர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் பலகைகளை மாற்றுவதற்கு, சில அடிப்படைவாதிகள் குரல் கொடுத்துவருகின்றனர். ஔரங்கசீப் பெயர் எடுத்துவிடப்படுவதும், அதே சாலைக்கு அப்துல் கலாம் பெயர் வைக்கப்படுவதும் எதை வெளிப்படுத்துகிறது? வரலாற்றைக் கட்டமைப்பது பலம் பொருந்திய அரசுகளே. அவற்றில் பெரும்பாலும் பெரும்பான்மையினரின் விருப்பங்களே உள்ளடங்கியிருக்கும். இயற்றப்பட்ட சட்டங்களின் ஆட்சியைவிட, மக்கள் மனதில் விதைக்க...