V.O.CHIDAMBARAM PILLAI - NAMAKKAL KAVIGNAR
வ.உ.சி.150 நினைவலைகள் ( பதிவு எண் 5/150) குலவுப் பிள்ளைச் சிதம்பரம் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை 1944 ல் வெளியாகிய நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையின் “என் கதை” சுயசரிதை தமிழின் ஆகச் சிறந்த மூன்று சுய சரிதைகளுள் அடங்கும். சுமார் 76 வருடங்களுக்கு முன்பாக வந்த ” என்கதை” யில் வரும் காலம், பாத்திரங்கள் பழையதாகி விடவில்லை. அவர் வாழ்ந்த காலத்து நிகழ்வுகளை, நண்பர்களை, தேசிய தலைவர்களை இதில் உயிர்ப்புடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் பெரியவர் வ.உ.சி. குறித்து கிலாபாத் சிறப்பு இரயில் வண்டியில் காந்தியடிகளை ஆதரிக்க பல உறுப்பினர்ளும், திலகர் அணியின் முக்கிய பிரதிநிதியாக வ.உ.சி, சிவா முதலானவர்களும் இந்த ரயிலில் பயணிக்கும் அனுபவ பதிவும் வரலாற்று முக்கியத்துவமானது. பெரியவர் வ.உ.சி. யும்,சிவாவும் காந்தியை ஆதரிக்கக் கூடாது என நம் நாட்டு ஒவ்வொரு பிரதிநிதியிடமும் இரயில் பெட்டியில் பிரச்சாரம் செய்து வந்தனராம். காந்தியின் சாத்வீக வழியை ஏற்றுக் கொண்டால் நாடு முழுவதும் வீரியமற்று கோழையாக ஆகிவிடுவீர்கள் என்று அறிவுறுத்திய போது வரதராஜ முதலியார் ப...