Posts

Showing posts with the label - INTRODUCTION

JOTHILAKSHMI - INTRODUCTION

Image
JOTHILAKSHMI - INTRODUCTION அடிக்கரும்பாய் இனித்த ‘யாரடி வந்தார்!’ முப்பதுகளில் நடிக்கத் தொடங்கிய பழம்பெரும் நடிகை எஸ்.ஆர். ஜானகி முதல் வாண்டுப் பையன் கமலஹாசன் வரை ஒவ்வொரு பத்தாண்டுக்கும் சில நடிகர்கள் இருந்த ‘வானம்பாடி’யில், கமலஹாசனை விட ஒரு சில வருடங்கள் மட்டுமே பெரியவளான ஒரு இளம் நடிகை யும் இடம்பெற்றிருந்தாள்.... அவள்தான் ஜோதிலட்சுமி. பின்னாளின் கவர்ச்சி நடனப்புயல்! ‘யாரடி வந்தார், என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்’ என்று ‘வானம்பாடி’யில் ஒய்யாரமாக வயதுக்கு மேற்பட்ட வசீகரங்களுடன் ஜோதிலட்சுமி ஆடிக்கொண்டு வருவதைப் பார்த்தால், படத்தின் குட்டிப் பயலை விட அவருக்கு நான்கு வருடங்கள்தான் அதிகம் என்று நம்பமுடியாது! ‘காளமேகம்’, ‘பிரபாவதி’ போன்ற பழைய படங்களின் கதா நாயகி நடிகையான எஸ்.பி.எல். தனலட்சுமி, அவருடைய தாயார். டி.ஆர். ராஜகுமாரி அவருக்கு சின்ன தாயார் முறை என்கிற அதிரவைக்கும் பின்னணிகள் ஒரு பக்கம் இருந்தாலும், 13 வயதில் பருவமங்கையாகத் திகழ்ந்த ஜோதிலட்சுமியை ஒரு அருமையான பாடலுக்கு நடனம் ஆட வைத்த பெருமை கண்ணதாசனைத்தான் சாரும்! அதுவும், நடனப்பெண் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அ...