KANCHANA ,THE UNFORGETTABLE ACTRESS IN KOLLYWOOD
KANCHANA ,THE UNFORGETTABLE ACTRESS IN KOLLYWOOD நினைவுப் பாதையில்தான் எவ்வளவு முகங்கள். இரவுப் பொழுது ரயில் பயணமொன்றில் நம்முடனேயே மூங்கில் காடு, ஆறு ,மலை சமவெளி என எல்லா இடங்களும் தொடர்ந்து வந்து ,இருள் கலைகையில் சொல்லாமல்,கொள்ளாமல் சென்று விட்ட நிலாக்களும் அங்கே இருக்கின்றன.. ஆயுள் பூராவும் நம் நிழல் போல் தொடர்பவையும் உண்டு. ஒரு வான வில் என்பது மறைந்து கொண்டிருக்கும் கணங்களிலுங் கூடத் தன் வர்ணங் களையெல்லாம் என் மனதில் நிரந்தரமாக வாரியிறைத்து விட்டுத்தான் சென்றிருக்கின்றது. ஒரு பறவை வந்தமர்ந்து தன் மொழியால் ஏதோ பேசி விட்டுப் பறந்த இடம் என் பார்வையில் ஒரு போதும் வெற்றிடமில்லை . அது எப்போதும் என் மன விருட்சத்தின் கிளையொன்றில் உட்கார்ந்து கொண்டு தன் அலகினை உரசிய படியேதான் இருக்கின்றது. கேலிப் பேச்சுகளும், குதூகலமும் , கும்மாளமும் எங்கள் வகுப்பறையில் பொங்கி வழிந்து கொண்டிருந்த கல்லூரிக் காலம் அது. மூன்று பாடங்களுக்கும் வந்தமரும் ஒரே ஆசிரியரின் முகத்தைப் பார்த்துச் சலித்துப் போயிருந்த எங்களுக்கு இறைவனின் ஆறுதல் பரிசாக ஒரு மாணவி வந்து சேர்ந்திருந்தாள் .அதிகமா...