Europe's first mountain railway departed on its inaugural ascent from Vitznau to Rigi Staffelhöhe MAY 21, 1871
Europe's first mountain railway departed on its inaugural ascent from Vitznau to Rigi Staffelhöhe ஓர் பல் தொடருந்து,பற்சட்ட மற்றும் பற்சக்கர தொடருந்து அல்லது பற்சட்ட இருப்புப் பாதை எனக் குறிப்பிடப்படுவது வழமையான இருப்புப் பாரைகளுக்கிடையே பற்களுடைய பற்சட்டம் அமைந்த இருப்புப் பாதை வழிகள் அல்லது வழியைப் பயன்படுத்தும் தொடருந்துகளாகும்.இத்தகைய தொடருந்து ஒன்று அல்லது மேற்பட்ட பற்சக்கரங்களைக் கொண்டு கீழுள்ள பற்சட்டத்தில் சரியாகப் பதிந்து செல்லும்.இவ்வகை அமைப்பு கூடுதல் சரிவுள்ள மலைப்பாதைகளில் தொடருந்துகள் சென்றுவர ஏதுவாகின்றன. ஷ்நீபெர்க் பற்சட்ட இருப்புப்பாதை இயக்கி,சாய்ந்த கொதிகலனுடன்,சமநிலை பாதையில். பெரும்பாலான பற்சட்ட தொடருந்துகள் மலைப்பகுதி தொடருந்துகள். இருப்பினும் கூடுதல் சரிவுகள் கொண்ட நகர்பகுதி தொடருந்துகளிலும் டிராம் வண்டிகளிலும் சில நேரங்களில் பயனாகின்றன. இவ்வகையான முதல் இருப்புப் பாதை இங்கிலாந்தின் மேற்கு யார்க்சயரின் லீட்ஸ் மற்றும் மிடில்டன் இடையேயான மிடில்டன் தொடருந்துவில் அமைக்கப்பட்டது. 1812ஆம் ஆண்டு நீராவி இயக்கி ம...