LOCO PILOT RULES AND REGULATIONS
LOCO PILOT RULES AND REGULATIONS இரயில் ஓட்டுநர்கள் பற்றி, கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்:* இரயில் ஓட்டுநரை “Loco Pilot” (LP) என்றும், அவருக்கு உதவி செய்பவரை “Asst. Loco Pilot” (ALP) என்றும் கூறுவார்கள். இன்றைய சூழ்நிலையில் அவர்கள் 13 மணி நேரம்வரை வேலை செய்கிறார்கள். சிவப்பு சிக்னலை மீறினால் இரண்டு பேருக்கும் வேலை இழக்கும் அபாயம் உண்டு. குறைந்தது 16 மணி நேரம் இடைவெளி தேவை... அடுத்த பணிக்குத் திரும்புவதற்கு. ஒரு இரயில் வண்டி ஓடாமல் சும்மா நின்று கொண்டிருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 25 லிட்டர் டீசல் செலவாகிறது. 100 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 400 முதல் 500 லிட்டர் டீசல் செலவாகிறது. ஒரு இரயில் வண்டி பிரேக் அடித்தால் அது நிற்பதற்கு எடுத்துக் கொள்ளும் தூரம் அந்த வண்டியின் நீளத்தைவிட மூன்று மடங்கு நீளம் தேவைப்படுகிறது, தோராயமாக ஒன்றரை கிலோமீட்டர். அதெல்லாம் சரி... இந்த இரயிலை ஓட்டுபவர்கள் தூங்குவார்களா..? அப்படித் தூங்கினால் எப்படி கண்டு பிடிப்பது..? தூங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது, ஆனால் இரண்டு பேருமே தூங்க முடியாது, யாராவது ஒருத்தர் விழித்திருக்க வேண்டும். VCD எனப்படும் விஜிலன்ஸ் கண்ட...