Posts

Showing posts with the label DEEP WELL

குடியிருக்க ஒரு பாழுங்கிணறு சிறுகதை

Image
குடியிருக்க ஒரு பாழுங்கிணறு  சிறுகதை  கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை எனக் கூறி, விவசாய நிலத்தையும் அதிலிருந்த வீட்டையும் ஃபைனான்ஸ் கம்பெனி ஜப்தி செய்து, மாடசாமியையும் அவனது குடும்பத்தையும் வெளியேற்றிய மூன்றாம் நாள், அவர்கள் கிணற்றில் குடியிருக்கலாம் என முடிவு செய்தார்கள். அது ஒரு பாங்கிணறு. தண்ணீர் வற்றிப்போய்த் தூர்ந்த நிலையில் இருந்தது. கிழிந்துபோன சாக்குப்பைகளும் குப்பைகளும் கோழி ரோமங்களும் நிரம்பியிருந்தன. காலி மதுபாட்டில்களும், உடைந்த மண்சட்டிகளும், தூமைத் துணிகளும்கூடக் கிடந்தன. அந்தப் பாங்கிணற்றுக்கும் வயது எழுபதுக்கு மேல் இருக்கக்கூடும். மாடசாமியும் அவனது குடும்பமும் அக்கிணற்றை இரண்டு நாள்கள் சுத்தப்படுத்தினார்கள். கிணற்றினுள் படிகள் இல்லை. கல்சொருகினுள் கையைப் பிடித்து ஏறவும் இறங்கவும் வேண்டியிருந்தது. இதனால், மூலைவீட்டுக் கருப்பையா தனது ஏணியை அவர்களுக்குக் கொடுத்து உதவினார்.  தன் இரண்டு மகள்கள், ஒரு மகன், மனைவியுடன் தன் வயதான தாயையும் அழைத்துக்கொண்டு மாடசாமி கிணற்றுக்குள் குடியிருக்கத் தொடங்கினான்.  வீடு என்பதே உருவாக்கிக்கொள்வதுதானே? குகைய...