VIJAYAPURI VEERAN
VIJAYAPURI VEERAN ஸ்வீட் சிக்ஸ்டி - விஜயபுரி வீரன் - சுந்தரதாஸ் . தமிழ் சினிமாவில் எம்ஜிஆரும் ரஞ்சனும் கத்திச் சண்டை வாள் சண்டை என்பவற்றினால் புகழ்பெற்றிருந்த போது திடீரென்று அறிமுகமாகி ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் விஜயபுரி வீரன் ஆனந்தன் , இவருடைய கதாநாயக அந்தஸ்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிட்டாடல் பிலிம்ஸ் சார்பில் படங்களை தயாரித்து டைரக்ட் செய்து கொண்டிருந்த ஜோசப் தளியத் மல்லிகா என்ற படத்தை உருவாக்கினார் , இதில் ஜெமினியும் பத்மினியும் நடித்தார்கள். கண்ணன் என்ற இளைஞன் இதில் வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே என்ற பாடலுக்கு நடித்திருந்தார். மல்லிகா எதிர்பார்த்த வெற்றியை தராததால் தான் அடுத்து தயாரிக்கும் படத்தை புதுமுகங்களை போட்டு தயாரிப்பது என தீர்மானித்த தளியத் அப்படத்திற்கு அதிரடியாக கண்ணனை கதாநாயகனாக தெரிவு செய்தார். கண்ணன் சேலத்தைச் சேர்ந்தவர் முஸ்லிமான அவரின் பெயர் ஹக்கீம் .கண்ணன் என்று பெயர் சூட்டியிருந்தார். தன் படத்துக்கு கதாநாயகன் ஆக்கிய கையோடு அவர் பெயரையும் ஆனந்தன் என்று மாற்றிவிட்டார். நடன...