Posts

Showing posts with the label SLEEPLESS NIGHTS

SLEEPLESS NIGHTS

Image
SLEEPLESS NIGHTS தூக்கம் தொலைத்த இரவுகள் . கடைசியாக இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள்  படுத்துத் தூங்கியது எப்போது?  என உங்களுக்கு நினைவிருக்கிறதா? கடந்த 20 ஆண்டுகளில் நாம் தூங்கச்செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதைக் கவனித்து இருக்கிறீர்களா? 8:00 மணிக்குள் இரவு உணவு முடித்து,  8:30-க்கு வெளிச்சம் அணைத்து,  பேசிக்கொண்டே படுக்கையில் விழுந்தால்,  9 மணிக்குள் உறங்கிப்போவோம்.  அது ஒரு காலம். 9 மணித் தூக்கம் என்பது,  10 மணியாகி,  நள்ளிரவாகி,  இப்போது அதிகாலை வரை வந்துவிட்டது.  அதிகாலை 3 மணி, 4 மணி வரைகூட விழித்திருக்கிறார்கள்.  இரவு வேலையின் காரணமாக கண் விழிப்பது,  என்றோ ஒருநாள் தூக்கம் வராமல் இப்படி ஆவது,என்பது எல்லாம் தனி. எந்த உடனடி காரணமும் இல்லாமல் தொடர்ந்து இரவுகளில் கண் விழிப்போர் பெருகிக்கொண்டிருக்கின்றனர்.  இதன் விளைவுதான்,  இந்த 20 ஆண்டுகளில் புதிது புதிதாகப் பெருகிப் பெருக்கெடுக்கும் நோய்கள். இரவுத் தூக்கம் தள்ளிப்போவதற்கும், நோய்களின் வருகைக்கும...