RAJA PARVAI -REVIEW
RAJA PARVAI -REVIEW `ராஜபார்வை' கமலின் முதல் ரிஸ்க் தெரியும்; ஆனால் இந்தக் குறியீடுகள் தெரியுமா? சுரேஷ் கண்ணன் `ராஜபார்வை' கமலின் முதல் ரிஸ்க் தெரியும்; ஆனால் இந்தக் குறியீடுகள் தெரியுமா? சினிமாத் துறையில் கமல்ஹாசன் செய்த பல பரிசோதனை முயற்சிகள், முன்னோடியான ஆக்கங்கள் போன்றவற்றை இன்று நாம் வியக்கிறோம் அல்லவா? ஆனால் இதன் குறிப்பிடத்தக்க முதல் மைல் கல் என்று ‘ராஜ பார்வையை’ சொல்லலாம். இது கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ‘ஹாசன் பிரதர்ஸ்’ தயாரித்த முதல் திரைப்படம். (பின்பு இந்த நிறுவனத்தின் பெயர் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலாக மாறியது). கமல் நடன உதவி இயக்குநராக திரைப்படத்துறையில் நுழைந்த விஷயம் நமக்குத் தெரியும். அவர் மெல்ல மெல்ல நடிகராக முன்னேறிய சமயத்தில் இயக்குநர் பாலசந்தரின் பார்வையில் பட்டு மேலதிகமாக பிரகாசிக்கத் தொடங்கினார். ஆனால் உள்ளுக்குள் அவருக்கு ஓர் ஆசை இருந்தது. அது திரைப்பட இயக்குநராவது. , ஆனால் அப்போது அவரது விருப்பத்திற்கு முட்டுக்கட்டையிட்டார் பாலசந்தர். “நீ எப்போது வேண்டுமானாலும் இயக்குநராகலாம். ஆனால் நடிகன் என்கிற வாய்ப்பைத் தவறவிட்டால் பின்பு கிடைக்காது. பொர...