JOHANNES GUTTENBARG ஜோஹன்னஸ் குட்டென்பெர்க்
JOHANNES GUTTENBERG ஜோஹன்னஸ் குட்டென்பெர்க் பிறப்பும் ,வளர்ப்பும்[மூலத்தைத் தொகு] ஜெர்மனியில், மெயின்ஸ் என்ற ஊரில், 1398ல் பொற்கொல்லர் பிரிலீலேடன், எல்சுவைரிச் தம்பதியரின் மகனாய் பிறந்தார். அரசுக்கு நாணயங்கள் செய்து கொடுக்கும் பணியில், இவரது குடும்பம் ஈடுபட்டு வந்தது. இது தவிர, இவரது தந்தை துணி வியாபாரமும் செய்து, பெரும் செல்வந்தராய் இருந்தார். பள்ளிப் படிப்பை உள்ளூரிலும், உயர்படிப்பை, எப்பர்ட் பல்கலை கழகத்திலும் முடித்தார் குட்டன்பர்க்.தன் தொழிலிலேயே மகனை ஈடுபடுத்த விரும்பினார் தந்தை. எனினும், குட்டன்பர்க்குக்கு அச்செழுத்துக்களை உருவாக்குவதிலேயே கவனம் சென்றது. அச்சுக்கலை முயற்சிகள்[மூலத்தைத் தொகு] சீனாவில், கி.பி., 868ல் புத்தகம் வெளியிட்டிருந்தனர். ஆனால், அதை உருவாக்க அதிகமாக சிரமப்பட்டிருந்தனர். களிமண்ணில் எழுத்துக்களை உருவாக்கி, அதில் மையை தடவி, காகிதத்தில் அச்சிட்டவுடன், மண் எழுத்துக்கள் நசுங்கிவிடும். குட்டன்பர்க், முதலில் ரப்பரில் எழுத்துக்களை செய்து, ஒரு மரப்பலகையில் அதை ஒட்டவைத்து, உருளை போன்ற ஒன்றை உருவாக்கி, அதில் பலகையை வைத்து, காகிதத்தில் சுழல்ம...