JEYAKANTHAN , MAXIM GORKEY OF INDIA
WRITER JEYAKANTHAN , MAXIM GORKEY OF INDIA APRIL 24,1934 - APRIL 8,2015 எழுத்தாளர் ஜெயகாந்தன். விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையினை யதார்த்தமாக எழுத்துக்கள் மூலம் உலகுக்கு தெரியப்படுத்திய எழுத்தாளர் ஜெயகாந்தன். சமூக அநீதி, பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்து ஆழமான சிந்தனைகளை எழுத்துக்களாக பதித்த மாபெரும் இலக்கியவாதி இயற்கை எய்தியுள்ளார். கம்யூனிச சித்தாந்தம் கொண்ட எழுத்தாளர் கடலூர் மஞ்சக்குப்பம் என்ற ஊரில் 1933ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி ஜெயகாந்தன் பிறந்தார். பத்து வயதுச் சிறுவனாக இருக்கும்போதே மூவர்ணக் கொடி பிடித்து பாரதியாரின் தேசிய எழுச்சி மிக்க பாடல்களைப் பாடிக்கொண்டு தெருவில் சென்றவர். பள்ளி சென்று பயிலாத ஜெயகாந்தன், 14வது வயதிலேயே சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்தார். சௌபாக்கியம் என்ற இதழில் ஆசிரியராக இருந்த பி.சி.லிங்கம் என்ற புலவரிடம் தமிழ் இலக்கிய கற்றுக்கொண்ட இவர், தமிழ்ப் புலவர் சொக்கலிங்கத்திடம் முறையாக மொழியறிவை வளர்த்துக்கொண்டார். ஜெயகாந்தன் எழுதிய முதல் சிறுகதை சௌபாக்கியம் என்ற இதழில் 1950ல் வெளிவந்தது. வசந்தம், மனிதன் உள்ளிட்ட இதழ்களில் சிறுகதை ...