KARUMUTHU THIAGARAJAN , FATHER OF ARTS,FREEDOM FIGHTER BORN 1893 JUNE 16 - 1974 JULY 29
KARUMUTHU THIAGARAJAN , FATHER OF ARTS,FREEDOM FIGHTER BORN 1893 JUNE 16 - 1974 JULY 29 இலங்கையில் தமிழர்களுக்கு உடலில் அடையாளச் சூடு போடும் பழக்கத்தினை தடுத்து நிறுத்திய கருமுத்து தியாகராஜன் செட்டியார், (சூன் 16, 1893 - சூலை 29, 1974) கலைத்தந்தை என்று அழைக்கப்பட்டவர். இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். மதுரையில் புகழ்பெற்ற தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களையும் நிறுவியவர் வாழ்க்கைக் குறிப்பு[தொகு] கருமுத்து தியாகராஜன் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டத்தில் முத்துக்கருப்பன் செட்டியாருக்கு பத்தாவது கடைசி மகவாகப் பிறந்தவர். இவர் இலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக அங்கு பத்திரிகை ஒன்றையும் தொடங்கி நடத்தினார். இந்தியா திரும்பிய தியாகராஜன் 1925 ஆம் ஆண்டில் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார். நூல் ஆலையும் நெசவு ஆலையும அமைத்தார். தமிழ் ஆர்வம்[தொகு] இவர் தமிழ் மீது தனி ஆர்வம் காட்டி வந்தார். இதன் காரணமாகத...