Posts

Showing posts with the label KATTABOMMAN

Veerapandiya Kattabomman History

Image
வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு – Veerapandiya Kattabomman History in Tamil சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு இன்று ஒட்டப்பிடாரமாக இருக்கும் இடம் தான் அப்போது வீர பாண்டிய புறமாக இருந்தது. அந்த பகுதியில் பிறந்ததாலேயே கட்ட பொம்மனுக்கு வீர பாண்டிய கட்ட பொம்மன் என பெயர் வந்தது. பூர்வீகம் : கட்ட பொம்மனின் முன்னோர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் தெலுங்கில் கெட்டி பொம்மு என்றால் வீரம் மிகுந்தவன் என்று அர்த்தம். நாளடைவில் அந்த பெயர் தான் மருவி கட்ட பொம்மன் என்று ஆனதாக சொல்லப்படுகிறது. கட்ட பொம்மனின் முன்னோர்கள் விஜய நகர பேரரசை ஆண்டு வந்தவர்கள். இப்போது உள்ள தமிழ் நாட்டை ஆண்ட சேர சோழ பாண்டியர்கள் மீது முகமதியர்கள் படை எடுத்து வந்து நாட்டை கைப்பற்றும் நிலையில் கட்ட பொம்மனின் முன்னோர்களிடம் உதவி கரம் கேட்டனர் தமிழக மன்னர்கள். பிறகு விஜய நகர போர் படை வந்து மீண்டும் நாட்டை மீட்டு கொடுத்தற்காகவும் அவர்களின் வீரத்தை பாராட்டும் விதமாகவும் அவர்களுக்கு பாஞ்ஜலம் குறிச்சியை பரிசாக கொடுத்தனர். அப்போது முதல் தான் கட்ட பொம்முவின் வம்சம் பாஞ்சாலம் குறிச்சியை ஆட்சி செய்து வந்தனர் . பிறப்பு மற்றும் குடும்பம்:...

VEERA PANDIYA KATTABOMMAN -NEW MESSAGE

Image
VEERA PANDIYA KATTABOMMAN -NEW MESSAGE இன்றைக்கு நட்சத்திர நடிகர்களின் புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் வாரத்தில், அரங்குகளின் அனுமதிச் சீட்டு கட்டணத்தை இரண்டு அல்லது மூன்று மடங்காக ஏற்றி விடுவது வாடிக்கையாக உள்ளது. ஆனால், 58 ஆண்டுகளுக்கு முன்பே, அதுவும் படத்தின் 100 ஆம் நாளன்று அனுமதிச் சீட்டின் விலையை ஐந்து மடங்கு உயர்த்தி விற்பனை செய்து இருக்கிறார்கள். !!! இது நிகழ்ந்தது 1959ல். வீரபாண்டிய கட்ட பொம்மன் திரைப் படம், நாகர் கோவில் பயனியர் பிக்சர் பேலஸ் அரங்கில், 100 நாள் விழா வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் திலகமும் கலந்து கொண்டார். அவர் வருகையின் 'எதிரொலியாக' அரங்கில் கூட்டம் முந்தியடிக்க ஆரம்பித்தது. !!! கூட்டத்தை சமாளிக்க திரையரங்க நிர்வாகம் அனுமதிச் சீட்டின் விலையை ஐந்து மடங்காக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது 25 பைசா டிக்கெட் 125 காசுகளாகவசூலித்தனர். ஆனால், எதிர்பார்த்தது போல் கூட்டம் குறைந்த பாடில்லை. மாறாக, மேலும் கூட்டம் அதிகமானது. அரங்கை விட வெளியில் இரு மடங்கு கூட்டம் நின்றது. அனைவரும் நடிகர் திலகத்தைப் பார்க்காமல் கலையப் போவதில்லை யெ...

VEERAPANDIYA KATTABOMMAN -CAIRO 1958 HOW PADMINI LOCKED IN

Image
  VEERAPANDIYA KATTABOMMAN -CAIRO 1958  HOW PADMINI LOCKED IN எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நடந்த திரைப்பட விழாவில் - 1958-ல் வெளியான 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தை சிறந்த படமாகவும் நடிகர் திலகம் சிவாஜியை சிறந்த நடிகராகவும் தேர்வு செய்தனர்...சென்னையிலிருந்து தயாரிப்பாளர், இயக்குநர் பி.ஆர். பந்துலு- சிவாஜி - பத்மினி - ராகினி உள்ளிட்ட குழு கெய்ரோ சென்றது... வெளிநாடு செல்லுமுன், மருத்துவ பரிசோதனை செய்த சான்றிதழை, கெய்ரோ விமான நிலையத்தில் காட்டச் சொன்னார்கள். பத்மினி மட்டும் அகப்பட்டுக் கொண்டார். இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக சென்னையில் மெடிக்கல் செக்கப் செய்து கொள்ளவில்லை என்றார் பத்மினி.. அதிகாரிகள் அதை காதில் வாங்கவே இல்லை. சர்டிபிகேட் இல்லாமல் கெய்ரோவுக்குள் நுழைய முடியாது என்று கூறி அவரை அழைத்துச் சென்று 'க்வாரண்டைன்'- உள்ளே தங்க வைத்து விட்டனர். நம் நாட்டில் நடக்கும் உலகத்திரைப்பட விழாவுக்கு இந்தியாவிலிருந்து வந்துள்ள கலைஞர்கள், கலாச்சார தூதுவர்கள்என்று சொல்லி அரசிடம் விசேஷ அனுமதி பெற முடியும்.அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. சிவாஜிக்கு அதிர்ச்சி .. பப்பிம்மாவை எப்படிய...

KATTABOMMAN DEATH 1799 OCTOBER 17

Image
KATTABOMMAN DEATH 1799 OCTOBER 17 நாள் : 17.10.1799 இடம் : ஆங்கிலேயர்களின் கயத்தாறு இராணுவ முகாம் “விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தான். இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களைக் கடுமை நிறைந்த வெறுப்புடன் பார்த்த வண்ணம் தூக்குமேடையை நோக்கிச் சென்ற அவனுடைய நடையில் உறுதியும் துணிவும் தெரிந்தது.” “மரத்தின் கீழே நின்ற தருணத்தில் வாய்பேச முடியாத தன்னுடைய தம்பியைப் பற்றி மட்டும் அவன் சிறிது வருத்தப்பட்டானென்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தூக்குமேடை ஏறியபோது, ‘இப்படிச் சாவதைவிட கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்று அவன் மனம் நொந்து கூறியிருக்கிறான்”. – கட்டபொம்மன் திரைப்படத்தின் இறுதிக்காட்சியினை நினைவுபடுத்தும் இந்தச் சம்பவம் கற்பனையல்ல. கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய ஆங்கிலேயத் தளபதி ...

THE REAL TRIAL ON KATTABOMMAN

Image
THE REAL TRIAL ON KATTABOMMAN புதுக்கோட்டையார் பிடித்துக் கொடுத்து 24.9.1799 இல் புதுக்கோடை அரசர் விஜயரகுநாத தொண்டைமான் எழுதி ய கடிதம் 29.9.1799 இல் கலெக்டர் லூஷ’ங்டனுக்கு கிடைத்தது. கும்பெனியாரை வாழ்த்தித் துவங்கும் அந்த கடிதம் தரும் விபரம் இதோ. மலைகளிலும் குன்றுகளிலும் எல்லாப் பக்கமும் என்னுடைய படையினரை பகைவர்கள் மறைந்திருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக நிறுத்தி வைத்திருந்தேன். இறைவனின் கிருபையாலும், கும்பெனியாரின் செழிப்பினாலும், மற்றும் என்னுடைய நல் அதிர்ஷ்டத்தாலும், சிவகங்கை தாலூகாவிலுள்ள கலியாப்பூர் என்ற ஊரிலுள்ள காட்டிலே, கட்டபொம்மனும் அவனது தம்பி ஊமத்துரையும் மற்றும் அவர்களது உறவினர்கள் ஆக ஏழு பேர்களுடன் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, நேற்று இரவு எனது படைகளை அனுப்பி அவர்களைச் சூழ்ந்து கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடனும், முயற்சியுடனும் அவர்கள் கைது செய்யப்பட்டனர். (சர்தார் திருக்களம்பூர் முத்துவைரவ அம்பலக்காரர் தலைமையில் சென்ற படை கட்டபொம்மனைப் பிடித்தது. இவரைப் புகழ்ந்து பாடிய கும்மிப்பாடலும் இருக்கிறது). உயிரைவிடத் துணிந்த உத்தமன் கலியாப்பூர் காட்டிலே ...