VEERA PANDIYA KATTABOMMAN -NEW MESSAGE
இன்றைக்கு நட்சத்திர நடிகர்களின் புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் வாரத்தில், அரங்குகளின் அனுமதிச் சீட்டு கட்டணத்தை இரண்டு அல்லது மூன்று மடங்காக ஏற்றி விடுவது வாடிக்கையாக உள்ளது.
ஆனால், 58 ஆண்டுகளுக்கு முன்பே, அதுவும் படத்தின் 100 ஆம் நாளன்று அனுமதிச் சீட்டின் விலையை ஐந்து மடங்கு உயர்த்தி விற்பனை செய்து இருக்கிறார்கள். !!!
இது நிகழ்ந்தது 1959ல். வீரபாண்டிய கட்ட பொம்மன் திரைப் படம், நாகர் கோவில் பயனியர் பிக்சர் பேலஸ் அரங்கில், 100 நாள் விழா வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது.
அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் திலகமும் கலந்து கொண்டார். அவர் வருகையின் 'எதிரொலியாக' அரங்கில் கூட்டம் முந்தியடிக்க ஆரம்பித்தது. !!!
கூட்டத்தை சமாளிக்க திரையரங்க நிர்வாகம் அனுமதிச் சீட்டின் விலையை ஐந்து மடங்காக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது 25 பைசா டிக்கெட் 125 காசுகளாகவசூலித்தனர். ஆனால், எதிர்பார்த்தது போல் கூட்டம் குறைந்த பாடில்லை. மாறாக, மேலும் கூட்டம் அதிகமானது. அரங்கை விட வெளியில் இரு மடங்கு கூட்டம் நின்றது. அனைவரும் நடிகர் திலகத்தைப் பார்க்காமல் கலையப் போவதில்லை யென உறுதியோடு நின்றனர். !!!
அதைக் கேள்வியுற்ற நடிகர்திலகம் அரங்கின் வெளியே வந்து ரசிகர்களிடையே தோன்றி, அரைமணி நேரம் காரின் மேல் ஏறி நின்று, மக்களிடம் உரையாற்றியது நெடுங்காலம் அவ்வூரில் பேசப்பட்ட சரித்திரமாகும் ஏன் இப்போதும்கூட மூத்த ரசிகர்கள் இந் நிகழ்ச்சியை பேசி மகிழ்வதுண்டு. !!!
No comments:
Post a Comment