Posts

Showing posts with the label PANDIYA

VEERA PANDIYA KATTABOMMAN -NEW MESSAGE

Image
VEERA PANDIYA KATTABOMMAN -NEW MESSAGE இன்றைக்கு நட்சத்திர நடிகர்களின் புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் வாரத்தில், அரங்குகளின் அனுமதிச் சீட்டு கட்டணத்தை இரண்டு அல்லது மூன்று மடங்காக ஏற்றி விடுவது வாடிக்கையாக உள்ளது. ஆனால், 58 ஆண்டுகளுக்கு முன்பே, அதுவும் படத்தின் 100 ஆம் நாளன்று அனுமதிச் சீட்டின் விலையை ஐந்து மடங்கு உயர்த்தி விற்பனை செய்து இருக்கிறார்கள். !!! இது நிகழ்ந்தது 1959ல். வீரபாண்டிய கட்ட பொம்மன் திரைப் படம், நாகர் கோவில் பயனியர் பிக்சர் பேலஸ் அரங்கில், 100 நாள் விழா வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் திலகமும் கலந்து கொண்டார். அவர் வருகையின் 'எதிரொலியாக' அரங்கில் கூட்டம் முந்தியடிக்க ஆரம்பித்தது. !!! கூட்டத்தை சமாளிக்க திரையரங்க நிர்வாகம் அனுமதிச் சீட்டின் விலையை ஐந்து மடங்காக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது 25 பைசா டிக்கெட் 125 காசுகளாகவசூலித்தனர். ஆனால், எதிர்பார்த்தது போல் கூட்டம் குறைந்த பாடில்லை. மாறாக, மேலும் கூட்டம் அதிகமானது. அரங்கை விட வெளியில் இரு மடங்கு கூட்டம் நின்றது. அனைவரும் நடிகர் திலகத்தைப் பார்க்காமல் கலையப் போவதில்லை யெ...

PALE PANDIYA -M.R.RADHA

Image
PALE PANDIYA -M.R.RADHA பலே பாண்டியா – இந்தப் பாடல் உருவான பின்னணி குறித்து எம்.ஆர். ராதா குறித்த எனது புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் இங்கே. ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்… மாமா… மாப்ளே…’ பாடலை முதன் முதலில் செட்டில் கேட்டார் ராதா. அவரது குரல் போலவே இருந்தது அது. ‘அட யாருப்பா இது? நான் பாடுன மாதிரியே இருக்குது?’ – ஆச்சரியமாகக் கேட்டார். விவரம் சொன்னார்கள். பாடலைப் பாடிய எம். ராஜூவை உடனே பார்க்க வேண்டும் என்று விருப்பப்பட்டார் ராதா. அவர் எம்.எஸ். விஸ்வநாதன் குழுவிலிருந்தவர். வரவழைக்கப்பட்டார். ஒல்லியாக, சிவப்பாக இருப்பார் அவர். ராதா முன் சென்று நின்றார். ‘என்னப்பா பாடகரை அழைச்சுட்டு வரலையா?’ கேட்டார் ராதா. இவர்தான் என்றார்கள். ‘பாடுனது நீங்களா?’ – ராதாவுக்கு ஆச்சரியம். ‘ஆமாண்ணே’ என்றார் ராஜூ. மென்மையான குரல். ‘எனக்கு அதிசயமா இருக்கு. பேசறப்போ இவ்வளவு மெதுவா பேசறீங்க. என் குரல்லயே பாடியிருக்கீங்க. உங்களை எப்படிப் பாராட்டறதுன்னே தெரியலை. நான் உன்னை மறக்கவே மாட்டேன் தம்பி. யாருப்பா அங்க? தம்பிக்கு காப்பி கொடுங்க’ உபசரித்து அனுப்பினார் ராதா. அந்தப் பாட...