Posts

Showing posts with the label KALINGATHU

KALINGATHU BARANI- JEYANGONDAN

Image
KALINGATHU BARANI- JEYANGONDAN  களம் பாடியவன்; வீரவளம் பாடியவன்; சோழர் குலம் பாடியவன்; காளி தலம் பாடியவன்; பெண்ணின் நலம் பாடியவன்; பகைவர் புலம் பாடியவன்; குருதிக் குளம் பாடியவன்; பாலை நிலம் பாடியவன்; சொல்லில் சிலம்பாடியவன் என்ற அத்துணை மிகுமொழிகளுக்கும் தகுமொழியாளரே கலிங்கத்துப்பரணி பாடிய செயங்கொண்டார். வரையறுக்கப்பட்ட 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் பரணியும் ஒன்று. ஆனால், தமக்கு நிகராய் ஒரு புலவரை ஒக்கவைக்கக் கருதாத சொக்கநாதப் புலவர் போன்றவர்களால் ‘பரணிக்கோர் செயங்கொண்டார்’ என்று பாடப்பட்ட தக்க புகழ்மிக்க கவி செயங்கொண்டார் ஒருவரே. இறைவனைத் தொடர்ந்து அரசனையும் பாடு பொருளாக்கும் பகிர்வுரிமையை வழங்கியது சிற்றிலக்கியம் செய்த சிறு புரட்சி. குறவஞ்சி - பள்ளு போன்ற வடிவங்களில் விளிம்புநிலை மக்களையும் பாடி முடித்தது சிற்றிலக்கியம் செய்த பெரும் புரட்சி. கோவை - உலா - பிள்ளைத்தமிழ் - அந்தாதி - கலம்பகம் - தூது - குறவஞ்சி - பள்ளு - மடல் - மாலை என விரியும் தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் பரணியும் ஒன்று. தக்கயாகப் பரணி - மோகவதைப் பரணி - பாசவதைப் பரணி - கஞ்சவதைப் பரணி - இரண...