Posts

Showing posts with the label BIRDS

Survival Of Fittest ஒரு அழகான சின்னக் கதை…

Image
   Survival Of Fittest  ஒரு அழகான சின்னக் கதை… வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது.அதைப் பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.அந்தப் பறவைக்கு தனிப் பாதுகாவலர், தனி உணவு அதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்துத் தரப்பட்டது.கோடைக் காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது. அந்தப் பறவை இனம் பெருகியது.பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக பறக்க விடப்பட்டது.அதற்கு தன் எதிரிகள் யார் என்றுத் தெரியவில்லை. அதனால் அந்தப் பறவை எதிரிகளுக்கு உணவானது அந்தப் பறவைக்கு மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்றுத் தெரியவில்லை.பறவைகள் அழியத் தொடங்கின (எதிரிகளுக்கு உணவாகி, மின் கம்பங்களில் கருகி, வண்டிகளில் மோதியும்). எந்த இனம் அழியக் கூடாது என்று முயற்சி எடுக்கப்பட்டதோ, அந்த இனம் அழியக் காரணமானது.அதே போல் தான் நாம், நமக்கு கிடைக்காதவைகளை, நம் பிள்ளைகளுக்கு கிடைக்கட்டும் என்று கொடுத்து நாம் அழகுப் பார்க்கிறோம். அவர்களுடைய அழிவுக்கும் நாமே உறுதுணையாய் இருக்கிறோம்.பூங்காவில் இருக்கும் விலங்க...

BIRDS IN CAGE ,FREE IT - SUPREME COURT

Image
BIRDS IN CAGE ,FREE IT -  SUPREME COURT .பறவைகளுக்கு சுதந்திரத்தோடு வாழும் அடிப்படை உரிமை உண்டு. அவைகளை வானில் சுதந்திரமாக பறக்க விடாமல் கூண்டிற்குள் அடைத்து வைப்பது கொடூரமானது என டெல்லி கோர்ட்டு தெரிவித்துள்ளது. இதுபற்றி, நீதிபதி மன்மோகன் சிங் கூறுகையில், 'பறவைகளை சுதந்திரமாக பறக்க விடுவதற்கு பதிலாக அவற்றிற்கு போதுமான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளின்றி கூண்டிற்குள் அடைத்து வைத்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். என்னை பொறுத்தவரையில், எல்லா பறவைகளுக்கும் வானில் சுதந்திரமாக பறக்க அடிப்படை உரிமை இருக்கிறது. வியாபாரத்திற்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ அவைகளை பிடித்து கூண்டிற்குள் அடைத்து வைக்க யாருக்கும் உரிமை கிடையாது. அவ்வாறு செய்தால் அது சட்டத்தை மீறுவதாகும்' என தெரிவித்தார். பறவைகளை கூண்டில் அடைத்து விற்றது தொடர்பாக மொஹாசிம் என்பவருக்கு எதிராக தொண்டு நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

PARSI SURRENDERED THEIR BODY FOR BIRDS AND ANIMALS

Image
PARSI  SURRENDERED THEIR BODY  FOR BIRDS AND ANIMALS கழுகுகளுக்கு உடலைத் தரும் பார்சி மக்கள்! தமிழகத்தில் ராஜாராஜ சோழனின் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது அதாவது கி.பி. பத்தாம் நூற்றாண்டில்(சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு) இந்தியாவில் நிகழ்ந்த சிறுகுடியேற்றங்களில் ஒன்று பார்சி மக்களின் வரவு. அன்றைய பாரசீக தேசமான, இன்றைய ஈரான் நாட்டிலிருந்து இனமோதல் காரணமாக பார்சி இன மக்கள் அகதிகளாக தப்பித்து விபாபாரக் கப்பல்களில் ஏறி இந்தியாவுக்கு குடும்பம் குடும்பமாக வந்துசேர்ந்தனர். இப்படி வந்தவர்கள் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் குடியேறினார்கள். இந்தியாவில் இன்று வாழும் பார்சி இனத்தவரின் மக்கள் தொகையானது 1 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே. பார்சி மக்களின் மக்கள் தொகையை அதிகரிக்கும் விதமாக அதிக குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் முறையை குஜராத்தில் உள்ள பார்சி முன்னேற்றச் சங்கம் கடைபிடித்து வருகிறது. தங்கள் தாய் மண்ணை விட்டு வந்துவிட்டாலும் தங்களது கலாசார பழக்க வழக்கங்களை அவர்கள் கடைபிடிக்கத் தவறவில்லை. அதில் ஒன்று இறந்த பிறகு தங்கள் உடல்களை கழுகுகளுக்கு திண்ணக் கொ...