Sunday, 17 May 2020

BIRDS IN CAGE ,FREE IT - SUPREME COURT





BIRDS IN CAGE ,FREE IT -
 SUPREME COURT




.பறவைகளுக்கு சுதந்திரத்தோடு வாழும் அடிப்படை உரிமை உண்டு. அவைகளை வானில் சுதந்திரமாக பறக்க விடாமல் கூண்டிற்குள் அடைத்து வைப்பது கொடூரமானது என டெல்லி கோர்ட்டு தெரிவித்துள்ளது.

இதுபற்றி, நீதிபதி மன்மோகன் சிங் கூறுகையில், 'பறவைகளை சுதந்திரமாக பறக்க விடுவதற்கு பதிலாக அவற்றிற்கு போதுமான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளின்றி கூண்டிற்குள் அடைத்து வைத்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். என்னை பொறுத்தவரையில், எல்லா பறவைகளுக்கும் வானில் சுதந்திரமாக பறக்க அடிப்படை உரிமை இருக்கிறது. வியாபாரத்திற்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ அவைகளை பிடித்து கூண்டிற்குள் அடைத்து வைக்க யாருக்கும் உரிமை கிடையாது. அவ்வாறு செய்தால் அது சட்டத்தை மீறுவதாகும்' என தெரிவித்தார்.

பறவைகளை கூண்டில் அடைத்து விற்றது தொடர்பாக மொஹாசிம் என்பவருக்கு எதிராக தொண்டு நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment