.'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார்
சீமான்
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி கிராமத்தில் 1905 ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27 ஆம் தேதி பிறந்தார். தந்தையார் சிவந்தி ஆதித்தன். தாயார் கனகம் அம்மையார். ‘ஆதித்தனார்’ என்பது அவரது குடும்பப் பெயர். ஆதித்தனாரின் இயற்பெயர் ‘ சிவந்தி பாலசுப்ரமணியன் ஆதித்தன் '.
Si Pa Adithanarதந்தையார் வழக்கறிஞர். சி.பா. ஆதித்தனார் தமது பள்ளிப் படிப்பை திருவைகுண்டத்தில் பயின்றார். திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்ட மேல் படிப்பை முடித்தார்.
கல்லூரியில் படிக்கும்போதே ‘ தொழில் வெளியீட்டகம்’ என்னும் பதிப்பகத்தை தொடங்கி, மெழுகுவர்த்தி செய்வது எப்படி ? தீப்பெட்டி தயார் செய்வது எப்படி? ஊதுபத்தி தயார் செய்வது எப்படி ? சோப்பு தயார் செய்வது எப்படி? பேனா மை தயாரிப்பது எப்படி ? என்பன போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டார். இதற்காக ஒரு அச்சகத்தை விலைக்கு வாங்கினார். இதன் மூலம் சுய தொழில் மீது அவருக்கு இருந்த ஆர்வம் வெளிப்படுவதுடன், தமிழக இளைஞர்கள் சுயமாக தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நல்ல சிந்தனையையும் அறிய முடிகிறது.
சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். இங்கிலாந்து தலைநகர் லண்டன் மாநகரத்திற்குச் சென்று படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றார். லண்டனில் படிக்கும் போதே நிருபராக பணியாற்றி படிப்புச் செலவிற்கு பணம் சம்பாதித்தார். சுதேசமித்திரன் இதழ், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் லண்டனிலிருந்து வெளி வந்த ஸ்பெக்டேட்டர் வார இதழ் முதலிய இதழ்களுக்கு செய்திக் கட்டுரைகள் எழுதி அனுப்பினார். இந்திய இதழ்களுக்கு லண்டனில் செய்தியாளராக இருந்த முதல் தமிழர் இவரே. லண்டனில் படிக்கும்போதே இதழ்கள் நடத்திட வேண்டுமென்ற உயர்ந்த இலட்சியத்தை உள்ளத்தில் ஏற்றார்.
லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று தமிழகம் திரும்பியவுடன், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார். சிங்கப்பூர் நாட்டில் பெரும் தொழில் அதிபராக விளங்கிய ஓ. ராமசாமி நாடார் என்பவரின் மகள் ஆச்சியம்மாள் என்ற கோவிந்தம்மாளை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.
சிங்கப்பூரில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த பொழுது, நல்ல வருமானம் கிடைத்தது. ஆனால், சி. பா. ஆதித்தனாரின் சிந்தனையெல்லாம் இதழ் நடத்த வேண்டும் என்பதையே சுற்றிச் சுற்றி வந்தது. அவரது மாமனாரோ அதிக வருமானம் வரும் வழக்கறிஞர் தொழிலை விட்டு விட்டு இதழ் நடத்தினால் பணம் சம்பாதிக்க முடியாது என்றார். “ அரிசி விற்றால் சாக்காவது மிச்சப்படும், பருப்பு உடைத்தால் உமி, குருணையாவது மிச்சப்படும், இதழ் நடத்தினால் என்ன மிஞ்சும் ? இருப்பதும் போய்விடும் ” எனக் கூறி இதழ் நடத்துவதை தடுத்தார். ஆனாலும், இதழ் நடத்தியே தீருவது என்பதில் ஆதித்தனார் உறுதியாக இருந்தார். வேறு வழியில்லாமல் அவரது மாமனாரும் ஒத்துக் கொண்டார். முதன் முதலில் 'மதுரை முரசு' என்னும் வாரம் இருமுறை வெளிவரும் இதழைத் தொடங்கினார். பின்பு, 'தமிழன்' என்னும் வார இதழைத் தொடங்கினார். தமிழன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தது தமிழின் மீது அவர் கொண்ட காதல் தான்.
மதுரையில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் , கலவரம் ஏற்பட்டு காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டார்கள் ஆனால், ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட வேண்டும் என்று காவல்துறையினர் கட்டளையிட்டார்கள். ஆதித்தனார் "மதுரையில் போலீஸ் துப்பாக்கிச் சூடு! மூன்று பேர் சாவு!" என முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியிட்டார்.
அதைப் பார்த்த ஆங்கிலேய அதிகாரிகள் போர்க்கால அதிகாரத்தைப் பயன்படுத்தி 'மதுரை முரசு' இதழைத் தடை செய்தனர். அதிகாரிகள் ஆணை பிறப்பித்தாலும் உண்மைச் செய்தியை வெளியிட ஆதித்தனார் தயங்கியது இல்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். 1942 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி 'தினத்தந்தி' நாளிதழை வெளியிட்டார். தலையங்கத்தில் நாட்டின் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளை மக்களுக்குப் புரியும் விதத்தில் எளிய தமிழ் நடையில் விளக்கினார். "ஒரு படம் ஆயிரம் சொல்லுக்குச் சமம்" என்னும் சீன பழமொழிக்கேற்ப, தமது தினத்தந்தி நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியிட்டார். பாமர மக்களும், எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள், கவர்ச்சி மிகுந்த தலைப்புகள், கருத்துப் படங்கள் இவற்றைக் கையாண்டார். அரசியல் , பொருளாதாரம், வர்த்தகம், திரைப்படம், விளையாட்டுச் செய்திகள் ஆகியவற்றை வெளியிட்டு தமிழக மக்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவும் உதவினார். தமிழகத்தில் இன்று 'தினத்தந்தி' நாளிதழ் 12 நகரங்களிலிருந்தும், புதுச்சேரி, மும்பை , பெங்களுர் முதலிய பெருநகரங்களிலிருந்தும் வெளி வருகிறது. பட்டித்தொட்டியெங்கும், ஊர்தோறும் தினத்தந்தி நாளிதழ் பரவி பல லட்சக்கணக்கான வாசகர்கள் படிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளது. மேலும், தினத்தந்தி குழுமத்திலிருந்து தினத்தந்தி, மாலை முரசு, ராணி, ராணி முத்து, ராணி காமிக்ஸ் போன்ற வார, மாத இதழ்களும் வெளியிடப்படுகிறது.
சி.பா. ஆதித்தனார் 1942 முதல் 1953 வரை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகச் செயல்பட்டார். 'தமிழ்ப்பேரரசு' என்னும் நூல் மூலம் தமிழின முன்னேற்றத்திற்கு செய்ய வேண்டியவைகளை வலியுறுத்தினார். 942 ஆம் ஆண்டு 'தமிழரசுக் கட்சி'யைத் தொடங்கி நடத்தினார். பின்பு. 1958 ஆம் ஆண்டு 'நாம் தமிழர்' இயக்கத்தையும் தொடங்கி செயல்படுத்தினார். 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டு சிறை சென்றார். அதே போன்று 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் கலந்து கொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டார்.
பேரறிஞர் அண்ணா அழைத்ததால் தி. மு. க.வில் இணைந்தார். 1957 முதல் 1962 வரை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். அவர் சபாநாயகராகப் பொறுப்பேற்றது முதல் சட்ட மன்றத்தில் சபை ஆரம்பிக்கும் முன்பு தினம் ஒரு திருக்குறள் கூறி அவையைத் தொடங்கினார். தமிழக அமைச்சரவையில் கூட்டுறவு, விவசாய அமைச்சராக பணியாற்றினார். திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரி ஏற்படுத்தப்பட்டு அக்கல்லூரியில் இதழியல் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. சி.பா. ஆதித்தனார் 'இதழாளர் கையேடு' என்னும் நூலை வெளியிட்டார். அந்த நூல் இதழாளர்களுக்கு மிகவும் பயனுடையதாக இன்றும் விளங்குகிறது.
'உடல் மண்ணுக்கு , உயிர் தமிழுக்கு' என்னும் முழக்கத்தின் மூலம் தமிழர்களை தட்டியெழுப்பினார். தமிழர்கள் தங்கள் கையொப்பத்தின் தலைப்பெழுத்தையும், கையெழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தாய் நாட்டுப் பற்றும், தமிழ் மக்கள் மீது அன்பும் கொண்டிருந்தார். பாமரனையும் படிக்க வைக்க வேண்டும், தமிழ் மொழி, தமிழினம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக தமது உயிர் மூச்சு உள்ளவரை வாழ்ந்தார் சி.பா. ஆதித்தனார்! 1981 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் காலமானர். அவரது புகழ் இதழியல் உள்ளவரை நிலைத்து நிற்கும்.
சி. பா. ஆதித்தனார் (1905 - 1981) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார். எனினும், காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது கட்சியின் செயற்பாட்டை இடைநிறுத்தினார்.[சான்று தேவை]
இளமைக் காலம்
இவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயாமொழியில் சிவந்தி ஆதித்தர். கனகம் அம்மையார் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தையார் ஒரு வழக்கறிஞர். தனது மகனையும் வழக்கறிஞராக ஆக்க விரும்பிய சிவந்தி ஆதித்தர், அவரை இங்கிலாந்துக்கு அனுப்பினார். அங்கு படிக்கும்போதே இதழியல் தொடர்பான பகுதி நேர வேலைகளைச் செய்துள்ளார். இலண்டனில் இருந்தபடியே சுதேசமித்திரன் போன்ற தமிழ் நாட்டுப் பத்திரிகைகளுக்கும், வட இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் வெளிவந்த சில பத்திரிகைகளுக்கும் செய்திகளையும், செய்திக் கட்டுரைகளையும் அனுப்பியுள்ளார்.
1933 ஆம் ஆண்டில் இவரது திருமணம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் கோவிந்தம்மாள். பின்னர் சென்னை திரும்பிய அவர், பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளால் கவரப்பட்டார். அக்காலத்தில் பெரியாரின் குடியரசுப் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். எனினும் தனது பிற்கால நடவடிக்கைகளுக்குப் பணம் திரட்டும் நோக்கில் சிங்கப்பூர் சென்ற அவர் அங்கே வழக்கறிஞராகப் பணிபுரிந்து நல்ல வருமானம் பெற்றார். 1942 ஆம் ஆண்டில் மீண்டும் தமிழ் நாடு திரும்பினார்.
பத்திரிகைப் பணி
இவர் தொடங்கிய முதல் பத்திரிகை தமிழன் என்னும் வார இதழ் ஆகும். 1942 ஆம் ஆண்டில் இதை அவர் தொடங்கினார். அதே ஆண்டிலேயே நவம்பர் மாதத்தில், தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழையும் அவர் தொடங்கினார். இது மதுரையில் இருந்து வெளிவந்தது. தனது இதழியல் முயற்சிகளைத் தொடர்ந்து விரிவாக்கி வந்த அவர், மாலை மலர் என்னும் மாலைப் பத்திரிகையையும், ராணி என்னும் வார இதழையும் தொடங்கினார். 1947 ஆம் ஆண்டில் தினத்தாள் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து அதனைச் சேலத்தில் இருந்து வெளியிட்டார். அடுத்த ஆண்டில், திருச்சி, சென்னை ஆகிய இடங்களிலிருந்து முறையே தினத்தூது, தினத்தந்தி ஆகிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டன.
தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித் தனது பத்திரிகைகளில் செய்திகளையும், பல்வேறு அம்சங்களையும் வெளியிட்டு வந்த ஆதித்தனார், அக்காலத்தில் நிலவிய உயர்தட்டு மக்கள் வாசிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த மொழி நடையைத் தவிர்த்து, சாதாரண மக்களை முன்னிலைப்படுத்தி எளிய தமிழ் நடையைக் கையாண்டார். இதனால் பரந்த அளவில் தமிழ் நாட்டில் வாசிப்புப் பழக்கம் பரவ வழிவகுத்தார். அடிப்படையான எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் மத்தியில் கூட, செய்திகளை வாசிக்கும் போக்கு வளர இவரது இதழியல் முயற்சிகள் வழி வகுத்தன.
மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் கீழ் ராணி முத்து என்னும் வெளியீட்டை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டுத் தமிழ்ப் பத்திரிகை உலகில் புதிய போக்கு ஒன்றிற்கு ஆதித்தனார் வித்திட்டார்.
சமூகவியல் நோக்கிலும், இவரது பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1947 ஆம் ஆண்டில் நாடு விடுதலை பெற்றபோது மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்த உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான சமகால அரசியல் அறிவை வளர்த்துக்கொள்வதில் இவரது இதழியல் முயற்சிகள் பெரும் பங்காற்றின.
அரசியலில் ஆதித்தனார்
இவர் சிங்கப்பூரில் இருந்து வந்ததுமே ”நாம் தமிழர்” இயக்கத்தைத் தொடங்கினார். ஆதித்தனார் பல போராட்டங்களிலும் பங்குபெற்றுள்ளார். சில சமயங்களில் இதற்காகச் சிறை சென்றும் உள்ளார். 1947 முதல் 1953 ஆம் ஆண்டுவரை தமிழக மேலவை உறுப்பினராகவும், பின்னர் 1957 முதல் 1962 வரை தமிழ் நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். 1964 இல் அவர் மீண்டும் மேலவை உறுப்பினர் ஆனார். 1967 ஆம் ஆண்டு இவர் சட்டப் பேரவையின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1969ஆம் ஆண்டு இவர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். இவருடைய அரசியல் சார்பு காலத்துக்குக் காலம் மாறியபடியே இருந்து வந்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தை ஆதரித்ததில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், தனித் தமிழ்நாடு கோரிக்கை எனப் பல அரசியல் நிலைகளையும் அவர் எடுத்துள்ளார்.
மறைவு
இவர் தனது 76 ஆம் வயதில் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி காலமானார்.
தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவரும் தினத்தந்தி நாளிதழைத் தொடங்கியவருமான சி.பா.ஆதித்தனார் (Si.Ba.Adithanar) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:*தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி என்ற கிராமத்தில் பிறந்தார் (1905). தந்தை, வழக்கறிஞர். சிவந்தி பாலசுப்ரமணியன் ஆதித்தன் என்பது இவரது முழுப்பெயர். ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பக்கல்வியும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலைப் பட்ட படிப்பும் பயின்றார்.
*கல்லூரியில் படிக்கும்போது ‘தொழில் வெளியீட்டகம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கி, மெழுகுவர்த்தி செய்வது எப்படி?, தீப்பெட்டித் தயாரிப்பது எப்படி? ஊதுபத்தி தயார் செய்வது எப்படி? உள்ளிட்ட பல நூல்களை எழுதி வெளியிட்டார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.*‘சுதேசமித்ரன்’, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ மற்றும் லண்டனிலிருந்து வெளிவந்த ‘ஸ்பெக்டேட்டர்’ வார இதழ் ஆகியவற்றில் கட்டுரைகள் எழுதினார். இந்தியா திரும்பியவுடன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் சிங்கப்பூர் சென்று பணியாற்றினார்.
*1942-ல் தமிழகம் திரும்பினார். முதன்முதலில் ‘மதுரை முரசு’ என்ற வாரம் இருமுறை இதழையும், பின்னர் ‘தமிழன்’ என்ற வார இதழையும் தொடங்கினார். யாருக்கும் அஞ்சாமல் உண்மை செய்திகளை வெளியிட வேண்டும் என்ற கொள்கையுடையவர். இதனால் இவரது பத்திரிகையை ஆங்கில அரசு தடை செய்தும்கூட தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாதவர்.*1942, நவம்பர் மாதம், மதுரையில் ‘தினத்தந்தி’ நாளிதழை வெளியிட்டார். தொடர்ந்து, ‘மாலை மலர்’ என்ற மாலைப் பத்திரிகையையும் ‘ராணி’ என்ற வார இதழையும் தொடங்கினார். 1947-ல் ‘தினத்தாள்’, ‘தினத்தூது’ ஆகிய பத்திரிகைகளையும் தொடங்கினார்.
சி.பா.ஆதித்தனார் நாடார்
தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் தமிழராக இல்லாவிட்டாலும் தினத்தந்தியைப் படிக்காமல் வளர்ந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு பத்திரிகை உருவாகக் காரணமாக இருந்தவர் சி.பா.ஆதித்தனார். தமிழர் தந்தை என பெருமையோடு கொண்டாடப்படும் இவர், நாடார் சமூகத்தின் மிகப் பெரிய பங்களிப்பு.
சிவந்தி பாலசுப்பிரமணிய ஆதித்தனார் - சி.பா.ஆதித்தனாரின் முழுப் பெயர் இதுதான். தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை ஓரம் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர்தான் காயாமொழி. இந்த ஊரில் 1905-ம் ஆண்டில் பிறந்தார் ஆதித்தனார். அப்பா, சிவந்தி ஆதித்தனார், ஸ்ரீவைகுண்டத்தில் வழக்கறிஞராக இருந்தார்.
ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளிப் படிப்பு முடிந்தவுடன், திருச்சி ஜோசப் கல்லூரியில் பி.ஏ.வும், எம்.ஏ.வும் படித்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் லண்டனுக்குச் சென்று பாரிஸ்டர் படிப்பு படிக்க வேண்டும் என்று விரும்பினார். 1927-ல் லண்டனுக்கு கப்பல் ஏறினார். லண்டனில் படித்துக் கொண்டிருந்தபோது, படிப்புச் செலவுக்கு அவர் வீட்டிலிருந்து பணம் எதிர்பார்க்கவில்லை. பத்திரிகை நிருபராக மாறி அவர் படிப்புக்குத் தேவையான பணத்தை அவரே சம்பாதித்துக் கொண்டார்.
பத்திரிகை நிருபராக அவர் செய்தி சேகரித்து அனுப்பிய விதம் தனித்துவமானது. அந்த சமயத்தில் லண்டனில் வட்ட மேஜை மாநாடு நடந்தது. எல்லா நிருபர்களும் அந்த மாநாடு பற்றிய செய்திகளை பத்தி பத்தியாக அனுப்பினார் கள். ஆனால், மாநாடு நடந்த சமயம் திடீரென மகாத்மா காந்தி வெளியே வந்தார். சிறிது நேரம் கழித்தே மீண்டும் உள்ளே போனார். காந்தியின் பல் ஒன்று ஆடிக் கொண்டிருந்தது. அந்த பல்லைப் பிடுங்கிப் போடவே காந்தி வெளியே வந்தார் என்கிற சுவாரஸ்யமான செய்தியை பத்திரிகைகளுக்கு அனுப்பியவர் ஆதித்தனார் மட்டுமே!
1933-ல் பாரிஸ்டர் படிப்பை முடித்துக் கொண்டு சிங்கப்பூருக்குப் போனார் ஆதித்தனார். சிங்கப்பூரில் ஓ.ராமசாமி நாடார் என்கிற மிகப் பெரிய செல்வந்தரின் மூத்த மகள் கோவிந்தம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். மனைவியுடன் சென்னைக்குத் திரும்பினார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். சென்னையில் ஒரு பத்திரிகையைத் தொடங்க வேண்டும் என்பது ஆதித்தனாரின் ஆசை. பத்திரிகை தொடங்கத் தேவை யான பணம் அவரிடம் இல்லை. அந்த பணத்தைச் சேர்க்க ஒரே வழி, வழக்கறிஞர் தொழிலை முனைப்போடு செய்வதுதான் என்கிற முடிவுக்கு வந்தார்.
அந்த சமயம், சிங்கப்பூர் பாரிஸ்டர்களின் சொர்க்க பூமியாக இருந்தது. சிங்கப்பூரில் ஆதித்தனார் ஆஜராகிய எந்த வழக்கும் தோற்கவில்லை. இரண்டாம் உலகப் போர் தொடங்கும் முன் சோமப்பா வழக்கில் ஆஜராகி, வெற்றி பெற்றதன் விளைவாக அவருக்கு கிடைத்த பணம் 60 ஆயிரம் ரூபாய்.
அந்த சமயத்தில்தான் இரண்டாம் உலகப் போர் மூண்டது. சிங்கப்பூரை எந்த நேரத்திலும் ஜப்பான் ராணுவம் கைப்பற்றிவிடும் என்கிற நிலையில் தாக்குதலுக்கு முதல் நாளன்று கிளம்பிய கடைசி விமானத்தில் ஏறினார் ஆதித்தனார். அந்த விமானம் கொல்கத்தா போவதற்குப் பதில் இந்தோனேஷியாவுக்குப் போனது. அங்கிருந்து ஒரு சிறிய கப்பலில் ஏறி, இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு இரண்டு மாதம் கழித்து வந்து சேர்ந்தார். இந்த இரண்டு மாதக் காலத்தில் அவர் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. ஆனால், இந்த கஷ்டங்கள் ஆதித்தனாரின் மனவலிமைக்கு இன்னும் வலு சேர்ப்பதாகவே அமைந்தது.
எந்த நோக்கத்துக்காக ஆதித்தனார் சிங்கப்பூருக்குச் சென்றாரோ, அந்த நோக்கத்தை தாயகம் திரும்பியவுடன் செயல்படுத்த ஆரம்பித்தார். 1942-ல் சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பிய நான்கே மாதங்களுக்குள் மதுரையில் 'தமிழன்’ என்கிற பெயரில் ஒரு வாரப் பத்திரிகையைத் தொடங்கினார்.
ஆதித்தனாருக்கு தமிழுணர்வு அதிகம். அதனால்தான் தன் பத்திரிகைக்கு 'தமிழன்’ என்று பெயர் வைத்தார். தமிழன் பத்திரிகையைத் தொடங்கு வதற்கு முன்பு மதுரை முரசு என்கிற பெயரில் ஒரு செய்திப் பத்திரிகையைத் தொடங்கினார் ஆதித்தனார். அந்த சமயத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் உச்சத்தில் இருந்தது. மதுரையில் நடந்த இந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது வெள்ளைக்கார அரசாங்கம். இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் இறந்தார்கள். ஆனால், இறந்தது ஒருவர்தான் என்று செய்தி வெளியிடும்படி உத்தரவு போட்டது ஆங்கிலேய அரசாங்கம். உண்மையை மட்டுமே சொல்வேன் என்பதில் உறுதியாக இருந்த ஆதித்தனார் 'துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் சாவு’ என்று தெள்ளத் தெளிவாக கொட்டை எழுத்தில் செய்தி போட்டுவிட்டு, அந்த பத்திரிகையை நிறுத்தினார்.
என்றாலும், செய்திப் பத்திரிகை தொடங்கி நடத்தும் வெறி அவருக்குள் தீயாக கனன்று எரிந்து கொண்டிருந்தது. சரியாக அறுபது நாட்கள் கழித்து, மதுரையில் 'தந்தி’யைத் தொடங்கினார். லண்டனில் அவர் படித்துக் கொண்டிருந்த போது 'டெய்லி மிரர்’ பத்திரிகையை விரும்பிப் படிப்பார். சாதாரண மனிதனுக்கும் புரியும்படியாக எல்லா செய்திகளையும் சுவாரஸ்யமாகத் தருவது டெய்லி மிரரின் வழக்கம். 'தந்தி’யும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தார்.
இதனிடையே, 'தமிழன்’ பத்திரிகையின் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால், ஒரே நேரத்தில் இரு பத்திரிகை வேண்டாம் என்று நினைத்ததன் விளைவு, தமிழன் பத்திரிகையை நிறுத்தினார்.
எந்தச் செய்தியாக இருந்தா லும் அதை முதலில் சொல்லிவிட வேண்டும் என்பதில் குறியாக இருப்பார். மதுரை திருப்பரங் குன்றத்தில் காங்கிரஸ் மாநாடு நடந்தபோது ராஜாஜி அணி, காமராஜர் அணியை வெளியேற்றிய செய்தியை சிறப்பு பதிப்பாக வெளியிட்டு, சுடச்சுட மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார் ஆதித்தனார். சில செய்திகளின் தலைப்பில் நட்சத்திரக் குறியிட்டு, 'இந்த செய்தி மற்ற பத்திரிகைகளில் நாளைதான் வரும்’ என்று எழுதினார்.
1943-ல் சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் செயல்பட ஆரம்பித்தது தந்தி. பிற்பாடு மயிலாப்பூருக்கு மாறியது. 1960-ல்தான் தற்போதிருக்கும் எழும்பூர் அலுவலகத்துக்கு நிரந்தரமாக இடம் பெயர்ந்தது. 1948-ம் ஆண்டு வரை தந்தி என்று அழைக்கப்பட்ட பத்திரிகையை தின தந்தியாக மாற்றினார் ஆதித்தனார். தபால் துறை நடத்தும் தந்தி அலுவலகத் துக்கும் ஆதித்தனாரின் தந்தி அலுவலகத்துக்கும் இடையே ஏற்பட்ட குழப்பத்தைத் தவிர்க்கவே தந்தியை தினத்தந்தியாக மாற்றினார்.
தனித்துவம் நிறைந்த செய்தி அளிப்பின் மூலம் சாதாரண மனிதர்களும் தினத்தந்தியின் வாசகர்களானார்கள். சாதாரண மனிதர்களும் எழுத்து கூட்டி படிக்கிற மாதிரி கொஞ்சம் பெரிய அளவில் எழுத்துக்களில் செய்திகளை அச்சிட்டார். ஜனரஞ்சகமான பல விஷயங் களை தினத்தந்தியில் சேர்த்தார். கருத்துப்படம், ராசி பலன், படக் கதை போன்ற பல அம்சங்கள் ஆதித்தனாரின் கண்டுபிடிப்பு என்றே சொல்ல வேண்டும்.
ஜனரஞ்சகமான விஷயத்தை சுவாரஸ்யமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்தவர் ஆதித்தனார். 'கத்தியால் சதக், சதக் என்று குத்தினார்’ என்று படித்தபோது கொலைச் சம்பவத்தை நேரில் பார்த்த பரபரப்பை அடைந்தனர் வாசகர்கள். ஊரிலேயே பெரிய மருத்துவமனையை 'பெரிய ஆஸ்பத்திரி’ என மக்கள் பாஷையிலேயே எழுதச் சொன்னார். கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை 'கென்னடி சுட்டுக் கொலை’ என்று நேரடியாக எழுதச் சொன்னார்.
ஆரம்பத்தில் மதுரை, சென்னை என இரண்டு நகரங் களிலிலிருந்து அச்சான தின தந்தியை எல்லா ஊர்களுக்கும் அனுப்பினார். ஆனால், போக்குவரத்து வசதி அந்த அளவுக்கு இல்லாத அந்த காலத்தில் எல்லா ஊர்களிலும் தன்னுடைய செய்தித் தாள் கிடைக்க வேண்டுமெனில் அந்தந்த ஊர்களில் பதிப்பை ஆரம்பிப்பதுதான் ஒரே வழி என்று நினைத்தவர் பெரிய நகரங்களிலும் தனியாக அலுவலகம் தொடங்கினார். இந்த அலுவலகங்கள் பெரும்பாலும் பஸ் ஸ்டாண்ட் அல்லது ரயில்வே ஜங்ஷனை ஒட்டி ஆரம்பித்தது ஆதித்தனாரின் பிஸினஸ் மூளைக்கு இன்னொரு சான்று. செய்திகள், ஆட்கள் எளிதில் வந்துபோக உதவியாக இருப்பதோடு, பத்திரிகைகளை உடனுக்குடன் அனுப்பவும் உதவியாக இருந்தது இது.
விளம்பரங்களிலும் புதுமை படைத்தவர் ஆதித்தனார். சிறிய நிறுவனங்கள்கூட சிறிய அளவில் விளம்பரம் தரும்படி மாற்றி அமைத்தார். ஆனால், விளம்பரம் வேண்டும் என்பதற்காக விற்பனை பற்றி தவறான தகவல்களை தருவது அவருக்குப் பிடிக்காது. ஒருமுறை விளம்பரம் வாங்குவதற்காக மதுரையில் இருந்த ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாகியைச் சந்தித்து விளம்பரம் கேட் டார். ''எத்தனை பிரதிகள் விற்பனையாகிறது?'' என்று கேட்டார் அந்த நிர்வாகி. ''ஏழாயிரம் பிரதிகள்'' என்றார் ஆதித்தனார். ''சென்னையில் வெளிவரும் பத்திரிகைகளே பத்தாயிரம்தான் விற்பனையா கிறது. நீங்கள் ஏழாயிரம் என்கிறீர்களே'' என்று கேட்டார் நிர்வாகி. ''உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் நள்ளிரவு எங்கள் அலுவலகத்துக்கு வாருங்கள். எத்தனை பிரதிகள் அச்சாகிறது என்று நீங்களே பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு வந்தார். அன்றிரவே தந்தி அலுவலகத் துக்கு வந்தார் அந்த நிர்வாகி. அச்சாகும் பிரதிகளின் எண்ணிக்கையைப் பார்த்தார். மறுநாளே விளம்பரம் தந்தார்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் செய்தித் தாள் அச்சிடும் காகிதத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. காகிதத் தட்டுப்பாட்டை சமாளிக்க தானே காகிதம் தயாரித்தார். வைக்கோலை கொண்டுவந்து, ஊறவைத்து, அதை கூழாக்கி, காகிதமாக்கி, பயன்படுத்தினார். 1962-ல் திருநெல்வேலியை அடுத்த அரியநாயகிபுரத்தில் சன் பேப்பர் மில் தொடங்கினார். பிஸினஸ் மொழியில் 'பேக்வர்ட் இன்டக்ரேஷன்’ என்று சொல்லப்படும் இந்த யுக்தியை அரை நூற்றாண்டுக்கு முன்பே செய்தவர் ஆதித்தனார்.
காலை எழுந்தவுடன் தினத் தந்தி என்கிற வழக்கத்தை ஏற்படுத்திய பிறகு, மாலை யிலும் ஒரு செய்தித் தாள் வெளிவந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்ததன் விளைவு, அடுத்தடுத்து மாலை செய்தித் தாள்களும் வந்தன. வாரப் பத்திரிகையைப் படிக்க நினைக்கிற வாசகர்களுக்கும், நாவல் படிக்க நினைக்கிறவர் களுக்கும் புதிய இதழ்கள் என பலவாறாக கிளை பரப்பியது இந்நிறுவனம்.
ஆதித்தனார் வெறும் பத்திரிகையாளர் மட்டுமல்ல, அரசியலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். சட்டமன்ற உறுப்பினராக இருந்ததோடு, அவைத் தலைவராகவும் அமைச்சரா கவும் பதவி வகித்தார். அரசியலில் முழுநேரமாகச் செயல்பட வேண்டியிருந்ததால் தனது புதல்வர்களை நிர்வாகத்துக்கு தயார்படுத்தினார்.
தனது இரண்டாவது மகன் சிவந்தி ஆதித்தனை எடுத்த எடுப்பி லேயே நிர்வாகத்துக்கு அவர் கொண்டு வந்துவிடவில்லை. ஆரம்பத்தில் அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாகப் பணிபுரியச் செய்தார். பிறகு அச்சு இயந்திரப் பிரிவில், பிறகு பார்சல், விற்பனைப் பிரிவில் எழுத்தர், நிருபர், துணை ஆசிரியர், இறுதியில் நெல்லை யில் மாலை முரசு தொடங்கி, அதன் உரிமையாளர், நிர்வாகி, ஆசிரியர் என படிப்படியாக வளர்த்து, இறுதியில் தினத் தந்தி-யின் நிர்வாகத்தை அவரிடம் ஒப்படைத்தார்.
சிவந்தி ஆதித்தன் தினத் தந்தியை இன்னும் உயர்த்தி காட்டினார். அவரது மகன் பாலசுப்பிரமணியன் இன்று வானொலி, தொலைக்காட்சி என புதிய துறைகளிலும் கால் பதித்துள்ளார்.
ஆதித்தனாரின் முதல் மகன் ராமச்சந்திர ஆதித்தன் மாலை நாளிதழ், வார இதழ், நாவல் என்று பத்திரிகைகளை வெற்றிகரமாகத் தொடர்ந்து நடத்தி வருகிறார். மேலும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மீட்புப் பணியில் இவரின் பங்கு முக்கியமானது.
1981-ல் சி.பா.ஆதித்தனார் மறைந்தாலும் அவர் விட்டுச் சென்ற தினத்தந்தி தமிழர் வாழ்வோடு ஒன்றிவிட்டது.
எந்த சமுதாயத்தையும் இழிவு படுத்த இல்ல
என் சமுதாயத்தை பெருமை படுத்துவதற்க்காக இந்த "உழைப்பால் உயர்ந்த நாடார்கள்"முகநூல் பக்கம்
No comments:
Post a Comment