Posts

Showing posts with the label 1905

KUMUDHINI ALIAS RANGANAYAGI WRITER BORN 1905 NOVEMBER 5 -1986

Image
  KUMUDHINI  ALIAS RANGANAYAGI  WRITER BORN 1905 NOVEMBER 5 -1986 சிலநாட்களுக்கு ஒரு நண்பர் ஒரு கட்டுரையின் பகுதியை எனக்கு அனுப்பி, இது யார் எழுதினார் எந்த வருடம் என்று தெரியுமா என்று எழுதியிருந்தார்: “நான் சென்னைக்குப் போகும் சமயமெல்லாம் அதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே என்னுடைய பாட்டி எனக்குப் புத்திமதி சொல்ல ஆரம்பிப்பார். அவற்றில் ஒன்று ‘கதவை எப்போதும் தாளிட்டு வா.. இல்லாவிட்டால், ‘அதை வாங்கு, இதை வாங்கு’ என்று தொந்திரவு செய்து கொண்டே இருப்பார்கள்’ என்பது. நானும் அவள் சொல்லுகிற விதமே செய்வது வழக்கம். அப்படிச் செய்தும் கூட சிற்சில சமயம் கதவைத் தட்டி உள்ளே இருப்பவர்களைக் கூப்பிட்டுத் தங்களுடைய போலிச் சரக்குகளை விற்கப்பார்க்கும் பலரிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆகையால், இந்த முறை ஒருதினம் பகல் வேளையில் வாசற்கதவை யாரோ தட்டின சமயம் நான் மிக ஜாக்கிரதையாக கதவை அரை அங்குலத்திற்குத் திறந்து எட்டிப்பார்த்தேன். அங்கு யாரோ புது மனிதன் நிற்பதைக் கண்டு, ‘ஏதாவது விற்க வந்திருக்கிறாயென்றால் எனக்கு ஒன்றும் வேண்டாம்’ என்றேன். நான் விற்க வந்திருப்பது சாமான்களல்ல.. சௌகரியத்தையே விற்க ...

FREEDOM FIGHTER R.CHIDAMBARA BHARATHI BORN 1905 JUNE 5 - 1987 APRIL 30

Image
  FREEDOM FIGHTER R.CHIDAMBARA BHARATHI  BORN 1905 JUNE 5 - 1987 APRIL 30 தியாகி ஆர்.சிதம்பர பாரதி (பிறப்பு:05.06.1905-நினைவு:30.04.1987) (படம்)      சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகச் சிறைப்பட்டு வட நாட்டுச் சிறைகளில் சுமார் 14 ஆண்டுகள் அடைபட்டுக் கிடந்த தியாகிதான் ஆர்.சிதம்பர பாரதி.        பெருந்தலைவர் காமராஜ் அவர்களுடைய நெருங்கிய நண்பரான சிதம்பர பாரதி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பலமுறை அவர்களுடைய சட்டங்களை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு 1957 தேர்தலில் மானாமதுரை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.         ஆர்.சிதம்பர பாரதி 1905 ஜூன் 5ஆம் தேதி மதுரையில் வடக்கு மாசி வீதியில் இருந்த ‘ராமாயணச் சாவடி’ எனும் இவர்களது இல்லத்தில் ரெங்கசாமி சேர்வைக்கும் பொன்னம்மாள் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவர்களுக்கு சிதம்பர பாரதி பதினாறாவது குழந்தை. இவருக்கு எட்டு அண்ணன்மார்களும், ஏழு அக்காமார்களும் இருந்தனர். இவருடைய ஐந்தாவது வயதில் இவருடைய தந்தை காலமானார்.   ...

QUEENIE LEONARD ENGLISH ACTRESS BORN 1905 FEBRUARY 18 - 2002 JANUARY 17

Image
  QUEENIE LEONARD ENGLISH ACTRESS BORN  1905 FEBRUARY 18 - 2002 JANUARY 17 Queenie Leonard (born Pearl Walker, 18 February 1905 – 17 January 2002) was an English character actress and singer. She was the last surviving cast member of And Then There Were None (1945).[ Early life and career She was born as Pearl Walker in Manchester, Lancashire, England in 1905 and began performing on stage with her father when she was 14 years old.[1] She debuted on film in 1931. She had already amassed 20 years of stage and screen experience when, in 1941, she made the first of more than 30 Hollywood films. She also appeared in cabaret in Britain and in the United States, starred in a one-woman show, acted in television sitcoms, and provided voices for Disney animated films. She retired in 1966. Her last appearance was in 20th Century Fox's Doctor Dolittle. Personal life Leonard was married to film designer Lawrence P. Williams from 1936 to 1947,[citation needed] and to actor Tom Conway[2] fro...

DAILY THANTHI FOUNDER ATHITHANAR BORN 1905 SEPTEMBER 27 - 1981 MAY 24

Image
.'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் சீமான் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி கிராமத்தில் 1905 ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27 ஆம் தேதி பிறந்தார். தந்தையார் சிவந்தி ஆதித்தன். தாயார் கனகம் அம்மையார். ‘ஆதித்தனார்’ என்பது அவரது குடும்பப் பெயர். ஆதித்தனாரின் இயற்பெயர் ‘ சிவந்தி பாலசுப்ரமணியன் ஆதித்தன் '.     Si Pa Adithanarதந்தையார் வழக்கறிஞர். சி.பா. ஆதித்தனார் தமது பள்ளிப் படிப்பை திருவைகுண்டத்தில் பயின்றார். திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்ட மேல் படிப்பை முடித்தார்.     கல்லூரியில் படிக்கும்போதே ‘ தொழில் வெளியீட்டகம்’ என்னும் பதிப்பகத்தை தொடங்கி, மெழுகுவர்த்தி செய்வது எப்படி ? தீப்பெட்டி தயார் செய்வது எப்படி? ஊதுபத்தி தயார் செய்வது எப்படி ? சோப்பு தயார் செய்வது எப்படி? பேனா மை தயாரிப்பது எப்படி ? என்பன போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டார். இதற்காக ஒரு அச்சகத்தை விலைக்கு வாங்கினார். இதன் மூலம் சுய தொழில் மீது அவருக்கு இருந்த ஆர்வம் வெளிப்படுவதுடன், தமிழக இளைஞர்கள் சுயமாக தொழி...

Mikhail Sholokhov -RUSSIAN NOVELIST , WINNER OF NOBEL PRIZE 1905 MAY 24 - 1984 FEBRUARY 21

Image
Mikhail Sholokhov - RUSSIAN NOVELIST , WINNER OF NOBEL PRIZE 1905 MAY 24 - 1984 FEBRUARY 21 .1930 ஆம் ஆண்டைய புரட்சியின் எழுச்சி தோன் கிராமங்களிலும், பண்ணைகளிலும் கிளர்ச்சியைத் தோற்றுவித்தது. தனியார் நிலங்களைப் பிரிக்கும் எல்லைக் கோடுகள் வழியாகக் கூட்டுப்பண்ணையின் ஏர்கள் அகழ்ந்து சென்று, தங்களது வாழ்வைத் திட்டமிட கஸாக்குகளை எதிர்த்து நிற்க வைத்தது. .. ஷோலகவின் "கன்னி நிலம்" வெறுமனே ஈர்த்துப் பற்றுகின்ற நாவல் அல்ல. அது ருஷ்ய கிராமப் புறங்களில் புரட்சி பொங்கி எழுந்ததைக் கூறும் ஆவணக் குறிப்புமாகக் கருதப்படும். கதை மாந்தர்களும் நிகழ்ச்சிகளும் திருப்புக் கட்டத்தைத் துல்லியமாகக் சித்தரிக்கின்றன, போல்ஷெவிக்குகளான தவீதவ், நகூல்னவ், ரஸ்மியோத்னவ் ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளான மய்தானிக்கவ், ஷ்சுக்கார் மற்றும் லூபிஷ்கின் இவர்களது எதிர்த்தரப்பினராகிய குலாக் ஒஸ்த்ரவ்னோவ், சார்ஜென்ட் மேஜர் பொலவ்த்ஸெவ் ஆகியோர் உண்மையான உயிருடன் பாத்திரங்களே ஆவர். இதிலிருந்து கிராமத்தில் இருந்த தொடர்பை நம்மால் உயிருடன் கண்டு கொள்ள முடிகிறது. கூட்டுப்பண்ணை முறை தொடங்கப் பெற்று ஆரம்ப ஆண்டுக...