THENISAI THENDRAL DEVA BORN NOVEMBER 20,1950
THENISAI THENDRAL DEVA BORN NOVEMBER 20,1950 தேவா (நவம்பர் 20, 1950) இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும், பாடகரும் ஆவார். இவரது பூர்வீகம் வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகிலுள்ள மாங்காடு கிராமமாகும். இவர் கடந்த இருபது வருடங்களாக இசைத் துறையில் பணியாற்றி வருகிறார். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் அமைந்துள்ளது. தேவா பல கானா பாடல்களை எழுதியும், அந்தப் பாடலைத் தானே பாடியும் உள்ளார். இவருடைய கானா பாடல்கள் பெரும்பாலும் சென்னைத் தமிழில் இருக்கும். இவருடைய மகன் ஸ்ரீகாந்த் தேவா, சுமார் 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஸ்ருதி சீசன் 2 ஆன்லைன் பாட்டு போட்டியின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் தேவா கலந்து கொண்டு தன்னுடைய சினிமா இசை பயணத்தின் நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ முன்பெல்லாம் பாடகர்கள் வாய்ப்பு கேட்பதே சிரமமாக இருக்கும், பாடகர்கள் கேசட்டில் ஏதேனும் ஒரு பாடலை பாடி பதிவு செய்து இசையமைப்பாளர்களிடம் கொடுத்து வாய்ப்பு கேட்பார்கள். இப்போது திறமை இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் முன்னுக்கு ...