Posts

Showing posts with the label HOROSCOPE

SIVAJI GANESAN HOROSCOPE

Image
SIVAJI GANESAN HOROSCOPE முந்திய கட்டுரையில் சிவாஜிகணேசன் ஒரு மிகச் சிறந்த கலைஞனாக உருவாக அவரது ஜாதகத்தில் என்னென்ன அம்சங்கள் இருந்தன என்பதையும் அவரது வாழ்க்கையில் 25-வது வயது ஏன் ஒரு முக்கியமான ஆண்டாக ஆகி மிகச் சிறந்த ஆரம்பத்தைக் கொடுத்தது என்பதையும் பற்றிப் பார்த்தோம். கால்நூற்றாண்டுக்கும் மேலாகக் கலைத்துறையில் நிலைத்து நின்று தமிழ்ச் சினிமாவின் வரலாற்றில் தவிர்க்க இயலாத பக்கங்களாக மாறிப் போன அவரது வாழ்க்கையில் 33 வயது முதல் 50 வயது முடிய உள்ள கால கட்டம் அவரது ஜாதகப்படி எவ்வாறு உள்ளது என்பதை இனி பார்ப்போம். நைசர்க்கிக தசைமுறைப்படி 33 வயது முதல் 50 வயது முடிய உள்ள 18 ஆண்டுகள் வியாழனுக்குச் சொந்தமானவை. வியாழன் ஒரு ஜாதகத்தில் ஆறுவிதமான பலங்களோடு நல்ல இடத்தில் இருக்குமானால் விசேஷமான நற்பலன்களையும், பலங்குன்றியவனாய்க் கெட்ட இடங்களில் இருக்குமானால் கெட்ட பலன்களையும் தருவான் என்பது பொதுவான கருத்தாகும். சிவாஜிகணேசன் ஜாதகத்தில் வியாழன் இயற்கை மித்ருவான செவ்வாயின் வீட்டில் இருந்து, இயற்கை சுபரான புதன் மற்றும் சுக்கிரனால் பார்க்கப்பட்டு நவாம்சத்திலும் இயற்கை மித்ருவான சூரியனின் வ...