Thenmozhi Rajaratnam (1 January 1974-21 May 1991) a female suicide bomber of Tamil Tigers
Thenmozhi Rajaratnam (1 January 1974-21 May 1991) a female suicide bomber of Tamil Tigers who killed Prime Minister of India Rajiv Gandhi on 21 May 1991. தேன்மொழி "காயத்திரி" ராசரத்தினம் ( Thenmozhi "Gayatri" Rajaratnam ), என்பவர் தற்கொலைக் குண்டுவெடிப்பில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர். 1991, மே 21 ஆம் நாள் தமிழ்நாட்டில் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் அவருடன், இராசீவ் காந்தி மேலும் பதினான்கு பேர் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். தேன்மொழி "காயத்திரி" மற்றும் "தனு" என்ற பெயர்களாலும் இவர் அறியப்படும் இவர் இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை படைத்துறையினருக்கும் 26 ஆண்டு தொடர்ந்த போரில் அமைதி நிலைநாட்ட சென்றிருந்த இந்திய அமைதி காக்கும் படையினரால் தேன்மொழி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அரசு எழுத்தரும் விடுதலை இயக்க வீரருமான ரா...