Posts

Showing posts with the label STRUGGLE

HEY RAM UNIQUE STORY OF OUR NATION IN STRUGGLE

Image
  HEY RAM UNIQUE STORY OF  OUR NATION IN STRUGGLE ஒரு மிகப்பெரிய கதையை எடுத்துட்டு எதை விடுவது ,எதை சேர்ப்பது  என்பது தெரியாமல் குழம்பிய கதை ஹே ராம் . இதன் பின்னணியை உங்களை  போன்றோர் விளக்கும் போது தான் எங்களைப்போன்ற மண்டைகளுக்கும் கொஞ்சம் உரைக்கிறது .இந்த படத்திற்கு ஹேமாவின் மூத்தமகள் ஈஸா நடிப்பதற்கு இருந்தது .ஆனா தர்மேந்திரா குறுக்கே நின்றார் .கடைசியில் வசுந்தரா நடித்தார் .அதிலிருந்து தர்மேந்திரா ஹேமமாலினி ஜோடி சில வருடங்கள் பிரிந்திருந்தது .நோ டிவோர்ஸ் . உண்மை என்னென்ன இந்த படம்  கோவையில் பார்த்தேன் . நிறைய தடவை தூங்கிட்டேன் .மாட்னி ஷோ வில் தூங்கியது இதுவே முதல் தடவை .இதையெல்லாம் ,இதன் சிறப்பையெல்லாம்  சொன்னதற்கு நன்றி ஆனந்தன் பிருந்தா  @@@@@@@ இந்திய சினிமா தன் நூறு ஆண்டுகளை கடந்துபயணித்துக் கொண்டு இருக்கிறது. ஆண்டுதோறும் தன் வெளியீடுகளைஅது அதிகரி த்துக் கொண்டு தான்இருக்கிறது.சினிமா தன்னை வளர்ச்சிப்பாதையில் முன்னெடுத்து செல்ல எண்ணிக்கைபடங்கள் தேவை இல்லை.என்றேனும் சில படங்கள்வரும்.அவை ஓடாத படங்கள் அல்ல.மக்களின்ரசனையை அதிகமாக எடை போட்டுவிட்டுஎடுக்கப்...

SAVARKAR BIOGRAPHY REGARDING FREEDOM STRUGGLE

Image
  SAVARKAR  BIOGRAPHY REGARDING  FREEDOM STRUGGLE சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்கிறது பா.ஜ.க அரசு - இது உண்மையா? வரலாறு சொல்வதென்ன? 9 பிப்ரவரி 2020 சாவர்க்கர்பட மூலாதாரம்,SAVARKARSMARAK.COM விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் எப்போதாவது மன்னிப்பு கேட்டாரா இல்லையா என்பது போன்ற பதிவுகள் ஏதும் அரசிடம் இல்லை என்று இந்திய கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது. அரசு கூறுவது என்ன? ஆனால் தகவல் அறிந்தவர்களின் கருத்துப்படி, சாவர்க்கர் பல முறை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டார். அது மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசிடமிருந்து மாதந்தோறும் அறுபது ரூபாய் ஓய்வூதியமும் பெற்றார் சாவர்க்கர். சாவர்க்கர் அந்தமான் செல்லுலார் சிறையிலிருந்தபோது பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டாரா என்ற கேள்வி அண்மையில் நாடாளுமன்றத்தில் எழுந்தது. இது குறித்துப் பேசிய மத்திய கலாசார அமைச்சர் பிரஹ்லாத் படேல், சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டாரா இல்லையா என்பதை தெளிவுபடுத்தும் பதிவுகள் ஏதும் அந்தமான் -நிக்கோபார் நிர்வாகத்திடம் இல...

TAMILNADU BORDER STRUGGLE

Image
TAMILNADU BORDER STRUGGLE 'தமிழ்நாடு எல்லைப் போராட்டம்' என்பதும், பெயர் சூட்டுகின்ற வரலாறு என்பதும் சட்டமன்ற பதிவேடுகளோடு அடங்கிவிடவில்லை. அதற்கப்பாலும் அதுபற்றிய சில உண்மைகள் உண்டு. வடவேங்கடம் முதல் குமரி வரையில் தமிழ் பேசப்பட்டது. அதுதான் தமிழ்நாடு என்று தொல்காப்பியர் காலம் முதல் நிறைய ஆதரங்கள் உண்டு. தமிழகத்தின் வரலாறு என்பது, மொழி வழியாக மாநிலம் அமைந்தது என்பது மிகப்பெரிய பின்னணியைக் கொண்டது. எல்லைப்போராட்டம் நடந்தபோது அன்றைக்கு ம.பொ.சி மட்டுமே குரல் கொடுத்தார். வடக்கெல்லைப் போராட்டத்தை அவருடைய தமிழரசுக் கழகம் முன்னின்று நடத்தியது. அவருடன், தளபதி விநாயகம், மங்களம்கிழார், ரஷத் போன்றவர்களெல்லாம் வெகுண்டெழுந்து போராடினார்கள். ஏராளமான தமிழரசுக் கழகத் தோழர்கள் சிறைப்பட்டார்கள். இரண்டு பேர் உயிர் இழந்தார்கள். அது ஒரு நெடிய வரலாறு. "யானை வாயில் போன கரும்பு திரும்பி வருமா...?" என்றால், "வராது" என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் வந்தது. திருத்தணியும் சேர்ந்து ஆந்திராவிற்கு போய்விட்டது. மொழி வாரி ஆணையம், சர்தார் கே.எம்.பனிக்கர் தலைமையிலே மத்திய...