CELLULOID CINEMA FILM NEGATIVES IN MUSEUM
CELLULOID CINEMA FILM NEGATIVES IN MUSEUM பிலிம் சுருள் இனி மியூசியத்தில் சினிமாவுக்குக் கதை எத்தனை முக்கியமோ அதைவிட முக்கியமான ஒன்றாக பிலிம் சுருள் இருந்தது. சுமார் 100 ஆண்டுகள் முடிவில் சினிமாவிலிருந்து மறைந்தேவிட்டது படச்சுருள். ‘பெட்டி வந்தாச்சு’ என்ற நவயுகச் சொலவடையும் தன் பயன்பாட்டை இழந்துவிட்டது. டூரிங் டாக்கீஸாக, கிராமம் வரை சினிமா வந்து சேர்ந்துவிட்ட 60 மற்றும் 70-களின் கோயில் திருவிழாக்களில் அதிசயக் காட்சிகளில் ஒன்றாக வருகைதந்த பயாஸ்கோப்காரன் மீண்டும் வராமல் போனால் இனி படச்சுருளை மியூசியத்தில்தான் நாம் காண முடியும். அப்படியொரு மியூசியத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறது புகழ்பெற்ற ‘பிரசாத் லேப்’ நிறுவனம். பிலிம் வாசனையை நுகரவும் அதன் ஸ்பரிசத்தை உணரவும் இதுபோன்ற அருங்காட்சியம்தான் இனி ஒரே வழி. கைவிடப்படும் நெகடிவ்கள் ‘மேரிட் பிரிண்ட்’ எனப்படும் ஒரு திரைப்படத்தின் படச்சுருள் பிரதியை அச்சிட்டுத்தரும் ‘பிலிம் லேப்கள்’ கோடம்பாக்கத்தில் இதயமாக இயங்கிவந்த காலம் ஒன்று இருந்தது. இன்று அவற்றுக்கு இரங்கற்பா எழுத வேண்டிய நிலையில், அவற்றின் பொற்காலம் குறித்த நின...