Posts

Showing posts with the label SHUNMUKI

ANN ANRA CHILD ARTIST IN AVVAI SHUNMUKI

Image
ANN ANRA CHILD ARTIST IN AVVAI SHUNMUKI  அவ்வை சண்முகியில் நடித்த அழகு குட்டிச் செல்லத்தை ஞாபகமிருக்கிறதா? அவர் பெயர் ஆன். இப்போது என்ன செய்கிறார்? எங்கே இருக்கிறார் இதே சென்னையில்... தான் உண்டு... நாய்க்குட்டிகள் சூழ்ந்த தன் தனிமை வாழ்க்கை உண்டு என ஆரவாரமின்றி இருக்கிறார் ஆன். ஆனைப் பார்க்கிறவர்களுக்கு அவரை நிச்சயம் அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. அவ்வை சண்முகியில் கொழுக் மொழுக் பார்பி பொம்மையாக அட்டகாசம் செய்தவர், இன்று சைஸ் ஸீரோ ஸ்மைலி. ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி இருக்கிறார். தேடிக் கண்டுபிடித்து 'ஹாய்... ஹலோ' சொன்னால், படத்தில் பார்த்த அதே உற்சாகத்துடன் வரவேற்கிறார் ஆன். ''20 வருஷங்கள் ஓடிப் போச்சு. அவ்வை சண்முகியில நடிச்சபோது எனக்கு 5 வயசு. எங்கண்ணன் பென்னும் நானும் அப்பவே மாடலிங் பண்ணிட்டிருந்தோம். டான்ஸ் மாஸ்டர் ரகுராம் பழக்கமானார். அவ்வை சண்முகியில நடிக்க குழந்தை நட்சத்திரம் தேடிக்கிட்டிருக்கிறதா சொல்லி என்னை கமல்சார்கிட்ட கூட்டிட்டுப் போனார் மாஸ்டர். கமல் சாருக்கு என்னைப் பார்த்த உடனேயே பிடிச்சுப் போச்சு. செலக்ட் பண்ணிட்டாங்க. கமல் சார்கூடவும் ம...