TIANANMAN SQUARE STUDENT`S REVOLT JUNE 4,1989 -DIED 10,454 WOUNDED 40,000
TIANANMAN SQUARE STUDENT`S REVOLT JUNE 4,1989 -DIED 10,454 WOUNDED 40,000 இந்தியாவில் இன்று ஜூன் 4 ஆனால் நாசகார சீனாவில் இன்று மே 35 சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் பலி - 10,454; காயம் - 40,000 உலக மனித உரிமைகள் தினம் - டிசம்பர் 10. மனித உரிமைகள் நினைவு தினம்....? மே 35. இது என்ன.... புது தேதியாக இருக்கிறது....? ஒரு நாட்டின் சர்வ வல்லமை பொருந்திய அரசாங்கம், தனது நாட்டு எல்லைக்குள், இணைய தளத்தில் ஜூன் 4 என்கிற தேதியையே தடை செய்து வைத்து இருக்கிறது. அதற்காக.....? சுதந்திரப் பிரியர்கள் சும்மா இருக்க முடியுமா.....? மே மாத 31 நாட்களுடன் ஜூன் மாத 4 நாட்களை சேர்த்து, மே 35 ஆக்கி விட்டார்கள். இந்த ஆண்டு, மே 35-க்கும் தடை வந்து, காணாமல் போய் விட்டது என்கிறார்கள். ஆமாம்.... ஜூன் 4க்கு தடை விதித்த நாடு... மனித உரிமைகளை, மனித மாண்புகளை அடியோடு அழித்த நாடு சீனா! மா சே துங்கின் சிவப்புப் படை 1960 - 70-களில் சீனாவின் அசைக்க முடியாத தலைவராக மா சே துங் இருந்தார். ‘கலாச்சாரப் புரட்சி’ என்று புதிதாக ஒரு கோட்பாட்டை 1966-ல் அறிமுகம் செய்தா...