THIDEER KANNAIYA , MISCELLANEOUS ACTOR DIED 2013 NOVEMBER 17
THIDEER KANNAIYA , MISCELLANEOUS ACTOR DIED 2013 NOVEMBER 17 திடீர் கண்ணையா (இறப்பு: 17 நவம்பர் 2013) தமிழ்த் திரைப்பட, நாடக நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் ஆவார். கண்ணையா சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். நாடகங்களில் திடீர் என்று தோன்றி வசனம் பேசும்படியாக இவர் அதிகமாக நடித்தால் 'திடீர்' கண்ணையா என்று பெயர் பெற்றார்.[1] இயக்குநர் கே. பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமானார். ஐநூறிற்கும் அதிகமான படங்களில் இவர் நடித்துள்ளார். குடும்பம்[மூலத்தைத் தொகு] கண்ணையாவுக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், ரமேஷ் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உள்ளனர். [2] தொழில்[மூலத்தைத் தொகு] சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கண்ணையா சிறு வயதில் இருந்தே பல்வேறு நாடகக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். "அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் முதன் முதலாக திரைத்துறைக்கு அறிமுகமானார். சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டே படங்களில் நடித்து வந்தார்.[3] நாடகம்[மூலத்தைத் தொகு] ...