Posts

Showing posts with the label ஓவியம்

காலங்களில் அவள் வசந்தம் கலைகளில் அவள் ஒரு மழலை ஓவியம்

Image
காலங்களில் அவள் வசந்தம்  கலைகளில் அவள் ஒரு மழலை ஓவியம்  காலங்களில் அவள் வசந்தம்  கலைகளில் அவள் ஒரு மழலை ஓவியம் - காயத்ரி சித்தார்த் என் பட்டுக் கண்ணம்மா.. 11.10.2016 - உலக பெண் குழந்தைகள் தினமாம். உலகம் முழுவதும் அனைவரும் தத்தம் பெண் குழந்தைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில் நான் என் முதல் தேவதையை விடவும் உன்னிடமே என் கவனம் முழுவதையும் குவித்திருந்தேன். ஏனென்றால் ஏனைய பெண் குழந்தைகளை விடவும் அது உனக்கு அதிமுக்கியமான நாள்!  கடந்த ஒரு மாதமாய் "நான் பிக்காஜி போப் போறேன்" என்று சொல்லிக் கொண்டேயிருந்த நீ, அந்த ப்ரீ கேஜிக்குள் முதன் முதலாய் அடியெடுத்து வைத்தாய். உன் அக்கா பள்ளிக்குச் சென்ற முதல் தினம்.. இன்னமும் நேற்றுப் போல் என் நினைவிலிருக்கிறது. அதற்குள் நீயும் சிறகு விரிக்கப் பழகி விட்டாய். வாழ்த்துக்கள் என் செல்லமே! அன்று நான் மிகவும் கலங்கினேன்.  உன் அக்கா எப்போதும் வீடு முழுவதும் நிறைந்திருப்பாள். வீட்டின் அத்தனை பொருளின் மீதும் அவளின் ஸ்பரிசமிருக்கும். ஒவ்வொரு நாளும் அத்தொடுகையை புதுப்பித்துக் கொண்டே இருப்பாள். அவள் பள்ள...