ADMK FORMED 1972 OCTOBER 17
ADMK FORMED 1972 OCTOBER 17 MGR தமிழக அரசியலில் புதிய சகாப்தம் அதிமுக தொடங்கிய நாள் 1972 அக்டோபர் 17 "எம்.ஜி.ஆர். திமுகவை விட்டு நீக்கப்பட்டு விட்டார்"... அந்த நாள் இன்று! 1972ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி சென்னை: தமிழக அரசியலில் புதிய சகாப்தம் தொடங்கிய நாள் இன்று. ஆம், 1972ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதிதான் திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். முழுமையாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். திமுக பொதுக்குழு இன்றுதான் கூடி திமுகவிலிருந்து எம்.ஜி.ஆரை நீக்கி தீர்மான் போட்டது. எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கும் தீர்மானத்தை நாவலர் நெடுஞ்செழியன் கொண்டு வர, அதை முதலில் திமுக செயற்குழு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து திமுக பொதுக்குழு கூடி நிறைவேற்றியதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து முழுமையாக நீக்கப்பட்ட நாள் இன்று. திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டதும் தமிழகமே கொந்தளித்தது. எம்.ஜி.ஆரின் ரசிகர்களும், அவருடைய ஆதரவாளர்களாக இருந்த திமுகவினரும் பெருவாரியாக திரண்டு வந்து எம்.ஜி.ஆர். பின் நின்றனர். திமுக உடைந்தது.. அதிமுக பிறந்தது. எம்.ஜி.ஆர். விவகாரம் குறித்து மறைந்த கவியரசு கண்ணதாசன் தான் எழுதிய ...