லட்சுமிகாந்தன் கொலை வழக்கு நவம்பர் 8, 1944
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு நவம்பர் 8, 1944 லட்சுமிகாந்தன் கொலை வழக்கு அப்போதைய சென்னை மாகாணத்தில் நவம்பர் 1944 முதல் 1947 வரை மிகவும் பரபரப்பாக நடந்த குற்றவியல் வழக்காகும். சி. என். லட்சுமிகாந்தன் எனும் தமிழ் பத்திரிக்கையாளர் சென்னை, வேப்பேரியில் நவம்பர் 8, 1944இல் கத்தியால் குத்தப்பட்டு அடுத்தநாள் காலையில் சென்னை பொது மருத்துவமனையில் உயிரிழந்தார். தமிழகத்தைக் குலுக்கிய சில கொலை வழக்குகளில் லட்சுமிகாந்தன் கொலைவழக்கும் ஒன்று. காரணம் கொல்லப்பட்டவன் அல்ல, குற்றவாளியாகக் கூண்டில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டவர்கள் தான் அந்தப் பரபரப்புக்குக் காரணம். அவர்கள்தான் புகழின் உச்சியில் இருந்த திரைப்பட நடிகர்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர். 1944ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை 1947 வரை வழக்கு நடந்து முடிவும் வந்தது. இதன் விவரங்களைச் சிறிது இப்போது பார்ப்போம். அந்த காலகட்டத்தில் மஞ்சள் பத்திரிகைகள் மலிந்திருந்தன. அதில் ஒன்று இந்துநேசன் எனும் பத்திரிகை. இதனை நடத்தி வந்தவன் லட்சுமி காந்தன். இந்த ஆளுக்கு அப்போதைய பிரபலமான மனிதர்களின...