R.SUNDARAJAN ,DIRECTOR BORN 1950 JANUARY 9
R.SUNDARAJAN ,DIRECTOR BORN 1950 JANUARY 9 வாய்ப்புகளைத் தேடிச் செல்பவர்கள் ஒரு வகை, வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்பவர்கள் இன்னொரு வகை. இதில் 2வது வகையைச் சேர்ந்தவர்களை வரலாறு வெற்றியாளர்களாக அடையாளம் காட்டத் தவறுவதில்லை. கோவையில் விவசாய குடும்பத்தில் பிறந்து பின்பு எம்ஜிஆர் ஆ(ட்)சியில் எம்எல்ஏ வாக உயர்ந்த ஒரு அரசியல்வாதியை சந்தித்து ‘என்னிடம் நல்ல கதை இருக்கிறது நீங்கள் தயாரிப்பாளராக முடியுமா?‘ என்று கேட்டிருக்கிறார் ஒரு இளைஞர். இத்தனைக்கும் அந்த இளைஞர் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியதில்லை. 80களில் நேரடி சினிமா அனுபவம் இல்லாத யாரும் இயக்குநர் ஆவதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதையெல்லாம் மீறி, அந்த எம்எல்ஏவுக்கு அவர் சொன்ன கதை பிடித்துப் போனது. திரைத் துறையில் அனுபவம் இல்லாத காரணத்தினால் மிகுந்த யோசனைக்குப் பின்பே அந்தப் படத்தை தயாரிக்க ஒத்துக் கொண்டார், அவர். அப்படி உருவான அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன், சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் 425 நாட்கள் ஓடி மிகப் பெரிய சாதனையை படைத்திருக்கிறது. 1980களில் ஆரம்பத்தில் வெளியான அந்தப் படத்துக்குப்...