நடிகையர் திலகம் சாவித்திரி. சுக்கு நூறாய் உடைந்த சாவித்திரியின் கடைசி நாட்களின் காட்சிப் பதிவுகள்.
நடிகையர் திலகம் சாவித்திரி. சுக்கு நூறாய் உடைந்த சாவித்திரியின் கடைசி நாட்களின் காட்சிப் பதிவுகள். சென்னை, லேடி வெலிங்டன் மருத்துவமனை - மாலை நேரப் பணிக்காக, செவிலியர் வந்து கொண்டிருந்தனர். அந்த அறையில், பாதி திறந்திருந்த கதவை தள்ளி, உள்ளே நுழைந்தாள் செவிலி ஒருத்தி. லேடி வெலிங்டன் மருத்துவமனையில், ஒரு வழக்கம் இருந்தது. அது, பணிக்கு வரும் செவிலியர், முதலில் தங்கள் நோயாளிகளின் அறைக்கு சென்று, ஜெபிக்க வேண்டும் என்பதே! அறைக்குள் நுழைந்த செவிலிப் பெண், சுவரில் மாட்டப்பட்டிருந்த மேரி மாதாவின் படத்துக்கு முன், கண்மூடி நின்று, கிறித்துவ மறைநூலான விவிலியத்தின் வசனம் ஒன்றை ஜெபிக்க ஆரம்பித்தாள்... 'திகையாதே; கலங்காதே; நான் உன்னோடு இருக்கிறேன்...' என்ற வசனத்தை உச்சரித்தபடி, மேரி மாதாவின் படத்திற்கு முன் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து, ஜன்னலைத் திறந்தாள். வெளியே, நீலவானத்தில் எப்போதும் மின்னும் விண்மீன்கள், ஏனோ அன்று ஒட்டுமொத்தமாகக் காணாமல் போயிருந்தன. தமிழ் திரையுலகின் உன்னத நட்சத்திரம் ஒன்று உணர்வற்று, துயில் கொள்ளும் போது, நாம் மட்டும் விழித்திருந்து மின்னுவது, அ...