Posts

Showing posts with the label SUANG

YUAN SUANG CHINESE TRAVELLER BIOGRAPHY

Image
  YUAN SUANG CHINESE TRAVELLER BIOGRAPHY யுவான் சுவாங்கின் பயணம் தொடர்ந்தது. தென்மேற்கு திசையில்  தொடர்ந்து தாஷ்கெண்ட் வழியாக சாமர்கண்ட் வந்தான். பிறகு தெற்கு திசையில்  பாமீர் பீடபூமி வழியாக குண்டூஸ் நகர் வந்தான். அங்கு பல புத்த மடாலயங்களைக் கண்டு, புத்த இலக்கியங்களை வாங்கினான். ‘படித்ததை கொடுத்தான். பிடித்ததை எடுத்தான்’. சந்தித்த சமய இலக்கிய விற்பன்னர்களுடன் ’அளவளாவல்’ செய்தான். பயணம் கிழக்கு திசையில் தொடர்ந்தது. ஷிபர் கணவாய் 3000 மீட்டர் உயரத்தில் இருந்தது. அதன் வழியாக ‘கபிசி’ (இன்றைய காபூல்) வந்தடைந்தான். காந்தாரம் மற்றும் அதன் தலைநகர் புருஷபுரம் – பழைய காலத்து செல்வாக்கெல்லாம் போய் இடிபாடுகளுடன் காணப்பட்டது. அங்கும் வாது செய்து புத்தமதத்தில் தனக்கிருந்த ஆளுமையைக் காட்டினான். புருஷபுரம் அருகே பல புத்த ஸ்தூபிகளைப் பார்த்தான். முக்கியமாக கனிஷ்கர் ஸ்தூபி. (வருடம் 1908: டி.பி. ஸ்பூனர் எண்ற தொல்பொருள் ஆய்வாளர் – யுவான் சுவாங்கின் எழுத்தைத் துணையாகக் கொண்டு – இந்த ஸ்தூபியைக் கண்டு  பிடித்தார்). Related imageபல நாடுகள், நகரங்கள், சிகரங்கள் தாண்டி – சிந்து நதியைக் கடந்து ...