MARY BARRETT DYER ,RELIGIOUS REFORMER BORN 1611 - 1660 JUNE 1
MARY BARRETT DYER ,RELIGIOUS REFORMER BORN 1611 - 1660 JUNE 1 மேரி பாரெட் டயர் (Mary Barrett Dyer) (1611 [2] – சூன் 1, 1660) ஓர் ஆங்கில சீர்திருத்தத் திருச்சபையினராக இருந்து அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்திலுள்ள பாசுடன் நகரில் மாநில சட்டங்களுக்கு எதிராக குவாக்கராக மாறியதால் தூக்கில் இடப்பட்டவர். [3] பாசுடன் தியாகிகள் எனக் குறிப்பிடப்படும் தூக்கிலிடப்பட்ட நால்வரில் ஒருவராவார். இறைவனுடன் தொடர்பு கொள்ள பைபில் படித்தால் போதுமானது என்றும், அதற்கு இடைத்தரகர் போல பாதிரியார்கள் தேவையில்லை என்றும் வலியுறுத்தினார். இவ்வாறு கருதுவது குற்றமாக கருதப்பெற்றமையால், இருமுறை நாடுகடத்தப்பட்டார். இருப்பினும் தம் கருத்தினை வலியுருத்தி மாசசூசெட்சுக்கு மீண்டும் வந்து பிரட்சாரம் செய்தமையால், 1660ல் மக்கள் முன்னிலையில் பாஸ்டன் ஹவுஸ் அருகேயுள்ள காமன்ஸ் பார்கில் தூக்கிலிடப்பட்டார். [4] ஆரம்பகால வாழ்க்கை [ தொகு ] மேரி பாரெட் டயர் அவர்களின் பிறந்த காலம் தோராயமாக 1611 என்று கணிக்கப்படுகிறது. இவர் லேடி அர்பெல்லா ஸ...