பிரபாகரனின் அட்டூழியங்கள் வரலாறு
பிரபாகரனின் அட்டூழியங்கள் வரலாறு தாயின் மறைவால் அரசியல் ஞாநமில்லாத இளைஞரான ராஜிவ்காந்தி பிரதமரானதும் , இலங்கை விவகாரத்தை முற்றிலும் இந்தியாவின் நிலை மாற்றி அமைக்கப்படும் என அறிவித்தார். அப்போதே பல தரப்பிலும் அடுத்த என்ன நடக்கும் என யூகித்தனர். இந்திராவின் நம்பிக்கைகுரியவரும் , தெளிந்த அரசியல் ராஜ தந்திரியுமான ஜி.பார்த்தசாரதியை நீக்கிவிட்டு அங்கு ரமேஷ் பண்டாரியிடம் ஒப்படைத்தார். அதற்கெல்லாம் முக்கிய காரணம் இந்திரா அம்மையார் இறப்பின் மீது அஞ்சலி செலுத்த வந்த ஜெயவர்தனா பேசிய ஆறுதல் பேச்சை நம்பி ஏமாந்ததால் தான் இத்தனை மாற்றம். 1985 மார்ச் மாதம் இந்தியாவின் ரா அமைப்பின் அதிகாரிகளும் ஐபி அதிகாரிகளும் போராளி குழு தளபதிகளை , தனித்தனியே சந்தித்தவர்கள் எங்க பிரதமர் உங்க விவகாரத்துல நடுநிலைய கடைபிடிக்க போறார் அதனால நீங்க உங்க பிரச்சனையை பேசி தீர்த்துக்குங்க என்று முடிவையும் ஆலோசனையும் கூறினார்கள். அதற்கு ஏற்றாற்போல் ஈழத் தேதிய விடுதலை முன்னணி என்ற அமைப்பை 1984 ல் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டமைப...