Survival Of Fittest ஒரு அழகான சின்னக் கதை…
Survival Of Fittest ஒரு அழகான சின்னக் கதை… வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது.அதைப் பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.அந்தப் பறவைக்கு தனிப் பாதுகாவலர், தனி உணவு அதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்துத் தரப்பட்டது.கோடைக் காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது. அந்தப் பறவை இனம் பெருகியது.பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக பறக்க விடப்பட்டது.அதற்கு தன் எதிரிகள் யார் என்றுத் தெரியவில்லை. அதனால் அந்தப் பறவை எதிரிகளுக்கு உணவானது அந்தப் பறவைக்கு மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்றுத் தெரியவில்லை.பறவைகள் அழியத் தொடங்கின (எதிரிகளுக்கு உணவாகி, மின் கம்பங்களில் கருகி, வண்டிகளில் மோதியும்). எந்த இனம் அழியக் கூடாது என்று முயற்சி எடுக்கப்பட்டதோ, அந்த இனம் அழியக் காரணமானது.அதே போல் தான் நாம், நமக்கு கிடைக்காதவைகளை, நம் பிள்ளைகளுக்கு கிடைக்கட்டும் என்று கொடுத்து நாம் அழகுப் பார்க்கிறோம். அவர்களுடைய அழிவுக்கும் நாமே உறுதுணையாய் இருக்கிறோம்.பூங்காவில் இருக்கும் விலங்க...