HUMOUROUS ACTRESS OF TAMIL CINEMA
HUMOUROUS ACTRESS OF TAMIL CINEMA .தமிழ்த் திரையின் பெண் நகைச்சுவை நடிகைகள் பா.ஜீவசுந்தரி வாசகசாலை .பொதுவாக இங்கு பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்ற தவறான கன்ணோட்டம் இருக்கிறது. பெண்களுக்கு நன்றாக நகைச்சுவை வரும். பெண்களைப் போல நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் கிடையாது. பெண் இயக்குநர் உஷா, ‘ராஜா மந்திரி’ என்ற நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். அது அவருடைய முதல் படம். இயல்பான நகைச்சுவையை வெளிப்படுத்திய ஒரு படம். பெண்களுக்கு இயல்பாகவே நகைச்சுவை வரும் என்பதற்கு இயக்குநர் உஷா ஒரு உதாரணம். நகைச்சுவை என்பது ஒரு உணர்வு தானே. அது ஆணுக்கு வரும் ஆனால் பெண்ணுக்கு வராது என்று சொல்வதற்கெல்லாம் எந்த முகாந்திரமும் இல்லை. நகைச்சுவை உணர்வு எல்லோருக்கும் வரும். என் மனைவி- சாரங்கபாணி கி ராமப்புறங்களின் பக்கம் சென்று பார்க்க வேண்டும். அங்கிருக்கும் கிழவிகளிடம் பேச்சு கொடுத்துவிட்டு மீண்டு வந்துவிட முடியாது. அந்த அளவுக்குத் தங்கள் நகைச்சுவையால் கிழித்துத் தொங்கவிட்டு விடுவார்கள். அந்த அளவிற்கு நகைச்சுவை உணர்வு அவர்களிடம் மேலோங்கி இருக்கும். பெரும்பாலான பெண்...