BIRTH DAY OF P.SUSHILA
BIRTH DAY OF P.SUSHILA என் பார்வையில் சுசீலாம்மாவின் பிறந்த தினக் கொண்டாட்டம். மாலை பொழுதின் மயக்கத்தில் காதல் சிறகை விரித்துப் பசுமை நிறைந்த நினைவுகளோடு நீல வானில் பறக்கும் குயிலுக்கு பிறந்த நாளா? விண்ணளந்த சாதனைகளைப் புரிந்தபின்னும் ஒன்றுமே சாதிக்காத பாவனையில் கள்ளமில்லா சிரிப்பை உதிர்க்கும் குழந்தைக்குப் பிறந்த நாளா? உலகையே தன் குரலால் மாயக்கண்ணனைப் போலக் கட்டிப்போட்டு மீளா மயக்கத்தில் ஆழ்த்திய இசை பேரரசிக்குப் பிறந்தநாளா? கோடி கணக்கான ரசிகர்களைக் கேட்டால் சொல்வார்கள், இன்னும் மீள விருப்பமில்லாமல் தேன் குரலில் ஆனந்தமாகக் கட்டுண்டு ஆழ்ந்திருப்பதை !! இவை அனைத்தின் மொத்த உருவமாய் விளங்கும் சுசீலா அம்மாவுக்குப் பிறந்த நாள். கோடிக் கணக்கான ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் இசை தேவதைக்குப் பிறந்தநாள் !! அம்மாவின் ரசிகர்கள் மற்ற ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்த நிகழ்ச்சிதான் இது. சில பிரமுகர்கள் கலந்து கொண்டாலும், அவர்கள் முதலில் அம்மாவின் ரசிகர்கள் பிறகுதான் சமூகத்தில் பிரபலங்கள். சென்ற வருடம் குறைந்த அளவில் ரசிகர்களை அவர்களின் வீட்டுக்கே வரவழைத்க் கொண்டாடி...