Showing posts with label FLUTE. Show all posts
Showing posts with label FLUTE. Show all posts

Monday, 9 April 2018

KARUKURICHI P.ARUNACHALAM , NAGASWARAM FLUTE MUSICIAN BORN 1964 APRIL 8




KARUKURICHI P.ARUNACHALAM ,
NAGASWARAM FLUTE MUSICIAN
BORN 1964 APRIL 8



karukurichi P Arunachalam (1907 - 8 ஏப்ரல் 1964)[1] தமிழகத்தைச் சேர்ந்த, புகழ்பெற்ற நாதசுவரக் கலைஞர்.
இசை வாழ்க்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் உள்ள ஒரு ஊர் காருக்குறிச்சி. இந்த ஊரில் அருணாசலம் 1907 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் பலவேசம்பிள்ளை. இந்த ஊரிலுள்ள கோயிலில் நாதசுவரம் வாசித்துக் கொண்டிருந்த இவர், சில திரைப்படப் பாடல்களுக்கும் நாதசுவர இசையைச் சிறப்பாகச் செய்து கொடுத்துப் புகழ் பெற்றிருக்கிறார். இவரின் நாதசுவரக் கச்சேரிகளுக்கு யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளையும், நீடாமங்கலம் சண்முக வடிவேலும் இணைந்து சிறப்புத் தவில் வாசித்துள்ளார்கள்[2].

இசைத்துறையில் நுழையக் காரணம்

காருகுறிச்சியிலிருந்த பெரும் பண்ணையாரின் இல்லத் திருமணத்திற்குக் கூறைநாடு நடேசபிள்ளை என்னும் புகழ்பெற்ற நாகசுர வித்வான் வந்திருந்தார். அவருடைய பணி மாப்பிள்ளை அழைப்பிற்கு நாகசுரம் இசைக்க வேண்டும். இதற்கிடையில், நெல்தானியம் அளந்து கொடுக்கும் பரம்பரை வேலையாகப் பலவேசத்திற்கு இருந்தபோதிலும், அவ்விழாவிற்கு மாலைகள் கட்டிக்கொடுக்கும் பணியில் இருந்தார். பெரும் பண்ணையார் நடேச பிள்ளைக்கு அளித்த மரியாதை பலவேசம் பிள்ளைக்கு கலைக்கு சமூகத்தில் உள்ள மரியாதையை உணர்த்தியது. தானும் கலைஞனாக வரவேண்டும் என்று எண்ணம் கொண்டு, சேரன்மகாதேவி சேர்ந்த ஒரு நாகசுரக் கலைஞரிடம் கற்கச்சென்றார். வயதும் சூழலும் ஒத்து வராததால், தனக்குப் பதிலாக தன் மகன், அருணாசலம் கற்கட்டும் என்று பலவேசம் முடிவு செய்தார். இந்தச் சூழல்தான் அருணாசலத்தை நாகசுரக் கலைஞராக மாற்றியது.[3]

நாகசுர ஆசிரியர்கள்

அருணாசலம், சுத்துமல்லி சுப்பையா கம்பர் என்பவரிடம் நாகசுரமும், களக்காடு சுப்பையா பாகவதரிடம் வாய்ப்பாட்டும் பயிலத் தொடங்கினார். கற்றபின் சிறிய சிறிய கச்சேரி வாய்ப்புகள் வந்தபோதும், கலைமேல் உள்ள விருப்பத்தால் இன்னும் அதிகம் கற்க விரும்பினார். தஞ்சாவூரில் பிறந்த நாகசுரக் கலைஞரிடம் கற்றால்தான் இன்னும் கலை மெருகேறும் என்று பலவேசம் நினைத்தார். அதன்படி திருவாவடுதுறை இராசரத்தினம் பிள்ளையிடம் தன் மகனை சீடனாக்க விரும்பினார்.

காருகுறிச்சியில் உள்ள கு. எ. பண்ணையில் நாகசுரம் வாசிக்க வந்திருந்தார் இராசரத்தினம் பிள்ளை. அவருடன் வாசிக்க வந்த “காக்காயி” நடராச சுந்தரத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, துணைக்கு யாராவது ஒரு சிறு பிள்ளை வேண்டும் என்றார் இராசரத்தினம் பிள்ளை. மணிசர்மா என்பவர் உடனே சென்று அருணாசலத்தை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். பையனின் திறமையைக் கண்ட ராசரத்தினம்பிள்ளை, தன்னுடனே இருக்கட்டும் என்று கூறினார். அன்று முதல், காருகுறிச்சி அருணாசலம், திருவாவடுதுறை ராசரத்தினம்பிள்ளையின் சீடரானார்.

நட்பு வட்டம்

அருணாசலத்திடம் மக்கள் நன்மதிப்பு தந்திருந்தனர். தம்பிக்கோட்டைப் பண்ணையார் பாலசுப்பிரமணிய தேவர் போன்றவர்கள் அவரிடம் பெரும் பற்று கொண்டிருந்தனர்.

சிறப்பு
சென்னைத் தமிழிசைச்சங்கத்தின் இசைவிழாவில் நடைபெற்ற காருகுறிச்சி அருணாசலத்தின் நாகசுரக் கச்சேரியை, வானொலி நிலையத்தார், வழக்கத்திற்கு மாறாக, நள்ளிரவு வரை ஒலிபரப்பினர்.

தவில் கலைஞர்கள்

காருகுறிச்சி அருணாசலத்தின் கச்சேரிக்குப் பலர் தவில் வாசித்திருந்தாலும், புகழ்பெற்ற சில தவில் கலைஞர்கள் உடன் வாசித்திருந்தனர். திருமுல்லைவாயில் முத்துவீர்ப்பிள்ளை, கும்பகோணம் தங்கவேல் பிள்ளை, நாச்சியார்கோவில் ராகவாப்பிள்ளை, வலங்கைமான் சண்முகச்சுந்தரம்பிள்ளை, வடபாதிமங்கலம் தட்சிணாமூர்த்தி பிள்ளை, பெரும்பள்ளம் வெங்கடேசபிள்ளை, கரந்தை சண்முகப் பிள்ளை, நீடாமங்கலம் சண்முகப்பிள்ளை, யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்திபிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தகவர் ஆவர்.

திரைப்படப் பங்களிப்பு

அருணாசலம் தனது நாகசுர இசையைக் கிராமபோன் இசைத்தட்டுகளில் பதிவு செய்திருப்பதோடு, சில திரைப்படங்களிலும் வழங்கியுள்ளார். கொஞ்சும் சலங்கை என்னும் திரைப்படத்தில், எஸ். ஜானகி பாட, அருணாசலம் நாகசுரம் வாசித்துள்ள. “சிங்காரவேலனே” என்ற பாடல் மிகவும் பிரபலமானதாகும்.

இறப்பு
அருணாசலம் கோவில்பட்டியில் உள்ள தன் இல்லத்தில், 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 அன்று மரணமடைந்தார்.

Sunday, 5 November 2017

T.R.MAHALINGAM FLUTE , BORN 1926 NOVEMBER 6


T.R.MAHALINGAM  FLUTE , 
BORN 1926 NOVEMBER 6 




டி. ஆர். மகாலிங்கம் (1926 November 6- 1986) தமிழ்நாட்டைச் சேர்ந்த புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஆவார். இவரை கருநாடக இசைத் துறையில் ‘மாலி’ என்று செல்லப் பெயரால் அழைத்தனர்.
ஆரம்பகால வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூரில் நவம்பர் 6 அன்று டி. ஆர். மகாலிங்கம் பிறந்தார். பெற்றோர்: ராமசாமி ஐயர், பிரகதாம்பாள். இவர் தனது தாய்மாமா ஜாலரா கோபால ஐயரிடம் இசை பாடுதலை கற்கத் தொடங்கினார். தனது ஐந்து வயது முதல் புல்லாங்குழல் வாசித்தலை சிறுவனுக்குரிய ஒரு விளையாட்டுத்தனத்துடன் ஆரம்பித்தார். நாளடைவில் காதால் கேட்கும் எப்பாடலையும் புல்லாங்குழலில் வாசிக்கும் திறனுடன் விளங்கினார்.
டி. ஆர். மகாலிங்கத்தின் முதல் இசை நிகழ்ச்சி அவருக்கு 7 வயதாகும்போது, மயிலாப்பூரில் நடந்த தியாகராஜா இசைத் திருவிழாவில் 1933 ஆம் ஆண்டு இடம்பெற்றது. அந்த நிகழ்ச்சியின் நிறைவில் பரூர் சுந்தரம் ஐயரும் முசிறி சுப்ரமணிய ஐயரும் சிறுவனுக்கு பொன்னாடை போர்த்தி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். தந்தையார், ஏராளமான நிகழ்ச்சிகளில் டி. ஆர். மகாலிங்கம் கலந்து கொள்ளும்படி செய்தார்.
தொழில் வாழ்க்கை[மூலத்தைத் தொகு]

புகழ் வாய்ந்த பக்கவாத்தியக் கலைஞர்கள் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, உமையாள்புரம் கோதண்டராம ஐயர், பழனி சுப்பிரமணிய பிள்ளை, வேலூர் ராமபத்ரன், மைசூர் சௌடய்யா, பாப்பா கே. எஸ். வெங்கட்ராமய்யா, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், டி. ருக்மிணி, துவாரம் மங்கதாயாரு மற்றும் டி. என். கிருஷ்ணன் ஆகியோர் இவரின் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றனர்.
சிறப்புகள்[மூலத்தைத் தொகு]

புல்லாங்குழல் வாசிப்பில் புதிய தொழில்நுட்ப திறன்களை அறிமுகப்படுத்தினார் டி. ஆர். மகாலிங்கம். ஒன்றிணைந்த; விட்டு விட்டு வாசிக்கக்கூடிய இசைக்கருவியாக இருந்து வந்த புல்லாங்குழல், வாய்ப்பாட்டு போன்று மாறியது. வாய்ப்பாட்டு நுணுக்கங்கள் அனைத்தையும் புல்லாங்குழலில் வெளிப்படுத்தினார் அவர்.
விருதுகள்[மூலத்தைத் தொகு]
பத்ம பூஷன் விருது, 1986; வழங்கியது: இந்திய அரசு (விருதினை டி. ஆர். மகாலிங்கம் வாங்கிக் கொள்ளவில்லை.)
உசாத்துணை[மூலத்தைத் தொகு]
பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் டி. எம். கிருஷ்ணா எழுதிய 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்!' ; விகடன் பிரசுரம், முதற்பதிப்பு: டிசம்பர் 2010