Sunday, 5 November 2017

T.R.MAHALINGAM FLUTE , BORN 1926 NOVEMBER 6


T.R.MAHALINGAM  FLUTE , 
BORN 1926 NOVEMBER 6 




டி. ஆர். மகாலிங்கம் (1926 November 6- 1986) தமிழ்நாட்டைச் சேர்ந்த புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஆவார். இவரை கருநாடக இசைத் துறையில் ‘மாலி’ என்று செல்லப் பெயரால் அழைத்தனர்.
ஆரம்பகால வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூரில் நவம்பர் 6 அன்று டி. ஆர். மகாலிங்கம் பிறந்தார். பெற்றோர்: ராமசாமி ஐயர், பிரகதாம்பாள். இவர் தனது தாய்மாமா ஜாலரா கோபால ஐயரிடம் இசை பாடுதலை கற்கத் தொடங்கினார். தனது ஐந்து வயது முதல் புல்லாங்குழல் வாசித்தலை சிறுவனுக்குரிய ஒரு விளையாட்டுத்தனத்துடன் ஆரம்பித்தார். நாளடைவில் காதால் கேட்கும் எப்பாடலையும் புல்லாங்குழலில் வாசிக்கும் திறனுடன் விளங்கினார்.
டி. ஆர். மகாலிங்கத்தின் முதல் இசை நிகழ்ச்சி அவருக்கு 7 வயதாகும்போது, மயிலாப்பூரில் நடந்த தியாகராஜா இசைத் திருவிழாவில் 1933 ஆம் ஆண்டு இடம்பெற்றது. அந்த நிகழ்ச்சியின் நிறைவில் பரூர் சுந்தரம் ஐயரும் முசிறி சுப்ரமணிய ஐயரும் சிறுவனுக்கு பொன்னாடை போர்த்தி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். தந்தையார், ஏராளமான நிகழ்ச்சிகளில் டி. ஆர். மகாலிங்கம் கலந்து கொள்ளும்படி செய்தார்.
தொழில் வாழ்க்கை[மூலத்தைத் தொகு]

புகழ் வாய்ந்த பக்கவாத்தியக் கலைஞர்கள் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, உமையாள்புரம் கோதண்டராம ஐயர், பழனி சுப்பிரமணிய பிள்ளை, வேலூர் ராமபத்ரன், மைசூர் சௌடய்யா, பாப்பா கே. எஸ். வெங்கட்ராமய்யா, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், டி. ருக்மிணி, துவாரம் மங்கதாயாரு மற்றும் டி. என். கிருஷ்ணன் ஆகியோர் இவரின் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றனர்.
சிறப்புகள்[மூலத்தைத் தொகு]

புல்லாங்குழல் வாசிப்பில் புதிய தொழில்நுட்ப திறன்களை அறிமுகப்படுத்தினார் டி. ஆர். மகாலிங்கம். ஒன்றிணைந்த; விட்டு விட்டு வாசிக்கக்கூடிய இசைக்கருவியாக இருந்து வந்த புல்லாங்குழல், வாய்ப்பாட்டு போன்று மாறியது. வாய்ப்பாட்டு நுணுக்கங்கள் அனைத்தையும் புல்லாங்குழலில் வெளிப்படுத்தினார் அவர்.
விருதுகள்[மூலத்தைத் தொகு]
பத்ம பூஷன் விருது, 1986; வழங்கியது: இந்திய அரசு (விருதினை டி. ஆர். மகாலிங்கம் வாங்கிக் கொள்ளவில்லை.)
உசாத்துணை[மூலத்தைத் தொகு]
பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் டி. எம். கிருஷ்ணா எழுதிய 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்!' ; விகடன் பிரசுரம், முதற்பதிப்பு: டிசம்பர் 2010

No comments:

Post a Comment